பாக்கியலட்சுமி சீரியலில் எதிர்பாராத திருப்பம்! இனியா விட்ட சவாலில் மூச்சு பேச்சில்லாமல் நின்ற ராதிகா! பரபரப்பான காட்சி..
பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவால் ராதிகாவிற்கும் கோபிக்கும் சண்டைகள் சூடுபிடித்துள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.
ஆரம்பத்தில் இந்த சீரியல் சாதாரண நிலைமையில் தான் ஓடிக் கொண்டிருந்தது, கோபியின் இரண்டாவது திருமணத்தின் போது தான் மக்களிடையே டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
இதன்படி, பாக்கியாவை விவாகரத்து செய்த கோபி ஒரு பெண் குழந்தையுடன் இருக்கும் ராதிகாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
இவர்களின் திருமணத்தை கோபியின் வீட்டிலுள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளாத நிலையில் எதிர் வீட்டில் ராதிகாவுடன் குடி வந்துள்ளார்.
இனியாவை பாக்கியா அடிப்பதாக கூறி இனியாவும் கோபியுடன் வந்துள்ளார். இவரை தொடர்ந்து கோபியின் அப்பாவும் வந்து ராதிகா வீட்டில் குட்டைய குழப்பி வருகிறார்கள்.
இனியாவின் சாவால்
இந்நிலையில் கோபியை ராதிகாவை விட்டு பிரித்து பாக்கியாவின் வீட்டிற்கே அழைத்து செல்ல போவதாக இனியா ராதிகாவிடம் சவால் விட்டுள்ளார்.
இதன்போது ராதிகாவும் “உங்கள் அப்பா என்ன கல்யாணம் பன்னிருக்காரு எப்படி வருவாரு?” என கேள்வியெழுப்ப “என்னுடைய அப்பா என்னுடன் தான் இருப்பார் அதனால் என்னுடன் வருவார்” என அழுத்தமாக கூறியுள்ளார்.
இதனை பார்க்கும் போது பாக்கியலட்சுமி சீரியலில் நாம் எதிர்பார்க்காத திருப்பங்கள் இருப்பது தெரியவருகிறது.
இந்த ப்ரோமோ வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.