நடிகை சௌந்தர்யாவை காதலித்தாரா இயக்குநர் சுந்தர் சி!
இட்லி என்று கூறினாலே நம் அனைவருக்கும் சட்டென்று கண்முன் தோன்றுவது யாரென்று கேட்டால், அது நடிகை குஷ்பு தான்.
அவரது அழகினாலும் நடிப்பினாலும் 80 காலகட்டங்களில் ரசிகர்களை கட்டிப் போட்டவர். ரஜினி, கமல், விஜய்காந்த், பிரபு என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தவர், கடந்த 2001 ஆம் ஆண்டு இயக்குநர் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமண வாழ்வில் அவந்திகா, ஆனந்திதா என்ற இரு மகள்கள் உள்ளனர். திருமண பந்தத்தில் இணைந்த பின்னரும் தனது நடிப்பை நிறுத்தாமல் வெள்ளித்திரையில் குணச்சித்திர வேடங்களில் நடித்ததோடு தொலைக்காட்சி தொடர்களிலும் தொடர்ந்து தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.
இதற்கிடையில் அரசியலிலும் தனது கவனத்தை செலுத்தினார்.
இந்நிலையில் நடிகை குஷ்புவின் கணவரான சுந்தர் சி, சமீபத்தில் வழங்கிய பேட்டியொன்றில், “தனக்கு நடிகை சௌந்தர்யாவை மிகவும் பிடிக்கும் என்றும் அவர் தங்கமான பெண் எனவும் தனது வாழ்வில் குஷ்பு வரவில்லை என்றால், தான் சௌந்தர்யாவிடம் தனது காதலைக் கூறி அவரையே திருமணம் செய்திருப்பேன்”என்றும் கூறியுள்ளார்.