விஜய் டிவியில் நடிக்கும் சீரியல் நடிகைகளுக்கு இவ்வளவு தான் சம்பளமா?
சினிமாவை விட குடும்பப் பெண்கள் சீரியல்களைத் தான் அதிகம் விருப்பிப் பார்ப்பார்கள். அதிலும் சில சீரியல்களுக்கும் அதில் நடிப்பவர்களுக்கும் ஒரு சிலர் தீவிர ரசிகர்களாய் இருப்பார்கள் அப்படி நீங்கள் விரும்பி பார்க்கும் விஜய் டிவி சீரியல் நடிகைகளுக்கு கிடைக்கும் சம்பளம் பற்றி தெரியுமா?
விஜய் டிவி சீரியல்
விஜய் டிவியில் காலையில் இருந்து இரவு வரைக்கும் சில சீரியல்கள் ஓடிக்கொண்டிருக்கிறது.
இதில் சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, தென்றல் வந்து என்னை தொடும், ஆஹா கல்யாணம், காற்றுக்கென்ன வேலி, மகாநதி என அடுத்தத்து ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல்களாகும்.
இந்த சீரியல்களில் சினிமாவைப் போல ஹீரோ, ஹீரோயின், வில்லன், நகைச்சுவை நடிகர் என பலரும் நடித்திருப்பார்கள். அதில் ஹிரோயின்களாக நடிக்கும் நடிகைகளின் சம்பள விபரங்களைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்
அண்ணன் தம்பிகளை பாசப்பிணைப்பை கதையாக காட்டி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸில் தனமாக நடித்து வரும் சுஜிதா சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது நடித்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நாள் ஒன்றுக்கு 15ஆயிரம் ரூபா வரைக்கும் சம்பளம் பெறுகிறார்.
பாக்கியலட்சுமி சுசித்ரா
மக்களை தினமும் ஒரு எதிர்ப்பார்ப்பில் வைத்திருக்கும் ஒரு சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ஒரு இல்லத்தரசியை மையமாக வைத்து தான் கதையை நகர்த்திக் கொண்டு செல்கின்றனர். இந்த சீரியல்களில் முதன்மையாக நடித்து வருபவர் தான் நடிகை சுசித்ரா. இவருக்கு நா் ஒன்றுக்கு 12ஆயிரம் ரூபா தான் சம்பளம் கிடைக்கிறது.
பாரதி கண்ணம்மா வினுஷா தேவி
பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்து வரும் நடிகை வினுஷா தேவி ஏற்கனவே இந்த தொடரின் முதல் பாகத்தில் கண்ணம்மாவாக நடித்திருந்தார். இப்போது இரண்டாவது பாகத்திலும் நடித்து வரும் இவருக்கு ஒரு நாளைக்கு 8000 ரூபா தான் சம்பளம்.
தமிழும் சரஸ்வதியும் நக்ஷத்ரா
தொகுப்பாளினியாக தன் திரைப்பயணத்தை ஆரம்பித்த நக்ஷத்ரா நாகேஷ், தற்போது சீரியல்களில் நடிகையாக அறிமுகமாகியிருக்கிறார். இவர் தற்போது தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் தொகுப்பாளர் தீபக்கிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாது வெள்ளித்திரையிலும் அவ்வப்போது தோன்றியிருக்கிறார். இவருக்கு இந்த சீரியலில் நடிப்பதற்கு ஒரு நாள் சம்பளமாக 10ஆயிரம் ரூபா கொடுப்படுகிறது.
பாக்கியலட்சுமி ராதிகா
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி. அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு வெளியேறிய பின்னர் சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்தவகையில் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் அந்த சீரியலில் நடிப்பதற்கு ஒரு நாள் சம்பளமாக 7000 ரூபா பெறுகிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |