சமையலுக்கு எந்த உப்பு பயன்படுத்துவது சிறந்தது? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
சமையலுக்கு எந்த உப்பை பயன்படுத்துவது சிறந்தது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
உப்பு
நாம் தினமும் செய்யும் சமையலின் சுவையையும், உடலின் சீரான செயல்பாட்டிற்கு முக்கிய பங்கு வகிப்பதும் உப்பு ஆகும்.
ஆனால் பெரும்பாலான நபர்கள் கல் உப்பு... தூள் உப்பு என பயன்படுத்தி வருகின்றனர். இதன் பின்னணி பலருக்கும் தெரியாததாகவே இருக்கின்றது.
அதாவது இயற்கையான முறையில் தோண்டப்படும் ஒன்று தான் கல்உப்பு ஆகும். தூள் உப்பு தொழிற்சாலைகளில் பராமரிக்கப்பட்டு தயார் செய்கின்றது.
இதில் சத்துக்களும், சுத்தம்செய்யும் முறைகளும் வேறுபட்டவையாக உள்ளன. இது உணவின் சுவைக்கும், உடல் பெறும் நன்மைக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். எந்த உப்பை தேர்ந்தெடுப்பது என்பது தெரிந்து கொள்ளலாம்.
எவ்வாறு தெரிவு செய்யலாம்?
கல் உப்பில் கால்சியம், மெக்னீசியம், சோடியம் குளோரைடு, சல்பர், ஆக்ஸிஜன், கோபால்ட் போன்ற பல நுண்ணூட்டச்சத்துக்கள் உள்ளன. இவை உடம்பிற்கு ஆரோக்கியத்தை அளிக்கின்றது.
தூள் உப்பின் அதிகம் உபயோகப்படுத்தல் உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
ஆதலால் இயற்கை மற்றும் குறைவான செயலாக்கத்தால் கல் உப்பு அதிக நன்மை தரும். ஆனால், சுத்தம் மற்றும் வசதிக்காக சிலர் தூள் உப்பையும் தேர்வு செய்கின்றனர்.
மேலும் கல் உப்பில் இயற்கையாகக் கிடைப்பதுடன், இதிலுள்ள கனிமங்கள் தூள் உப்பை விட அதிகமாகும். இயற்கை முறை சமையலில் இவை சிறந்த தெரிவாக உள்ளது.
ஆனால் தூள் உப்பு தொழில் தொழில்துறையில் பரிமாறப்படும் போது சுத்திகரிக்கப்படுகின்றது. மேலும் இதில் அயோடின் சோன்ற சேர்க்கைகள் சேர்க்கப்படும் போது உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
கல் உப்பின் சுவை, உணவுக்கு ஒரு தனி இயற்கை ருசியை வழங்கும். தூள் உப்போ, சீரான சுவையைத் தரும் ஆனால் இயற்கை நன்மைகள் குறைவாக இருக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |