பாரதி கண்ணம்மா சீரியல் எப்பொழுது முடியும்? வில்லி வெண்பா வெளியிட்ட உண்மை
பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி ரோலில் நடித்து வரும் நடிகை ஃபரினா ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு மிக அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது டிஆர்பியில் முதலிடத்தில் இருப்பதும் இந்த சீரியல் தான்.
இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களுக்கும் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த தொடரின் வில்லி வெண்பா என்ற ரோலில் நடித்துவரும் Farina azad தற்போது இன்ஸ்டாவில் லைவ் வந்துள்ளார்.
அப்பொழுது ரசிகர்கள் ஒருவர் அவரது வயதைக் கேட்டுள்ளதோடு, கணவருடன் இருக்கும் புகைப்படத்தினையும், கண்ணம்மா சீரியல் எப்போ முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கு வெண்பா தனது வயது 28 என்றும், சீரியல் 2051ல் முடிவடையும் என்றும் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தினையும் வெளியிட்டுள்ளார்.
இவர் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.