விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சியில் இருந்து விலகிய புகழ்! என்ன காரணம் தெரியுமா? மகிழ்ச்சியில் ரசிகர்கள்
விஜய் டிவியில், ஒளிபரப்பான 'கலக்க போவது யாரு' நிகழ்ச்சியில் ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியனாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, தற்போது 'குக் வித் கோமாளி' சீசன் 2 -ல் காமெடியால் கலக்கியவர் புகழ்.
இந்நிலையில், இவர் விஜய் டிவியில் சமீபத்தில் துவங்கப்பட்ட... 'காமெடிய ராஜா கலக்கல் ராணி' என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரகரகமான காமெடி செய்து அசத்தி வந்தார்.
தற்போது திடீர் என்று புகழ் இந்த நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்ட போது, அவருக்கு அனைவரும் கை தட்டி தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்.
இதுகுறித்து புகழ் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் அதில், அனைவருக்கும் வணக்கம்... நீங்கள் எல்லோரும் நன்றாக இருப்பீர்கள் என நினைக்கிறன்.
உங்களுடைய ஆதரவால் சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. விரைவில் பட ஷூட்டிங் முடிந்ததும் உங்களை வந்து சந்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.