பாக்கியலட்சுமியில் இருந்து ரேஷ்மா விலகல்?
பாக்கியலட்சுமி தொடரில் நானே தொடர்வேனா என்பது தெரியாது என அதில் ராதிகாவாக நடித்து வரும் ரேஷ்மா பசுபுலேட்டி கூறியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி, இல்லத்தரசி ஒருவர் தன்னுடைய குடும்பத்திற்காக போராடும் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது.
இதில் பாக்கியாவாக சுசித்ரா, கோபியாக சதிஷ், ராதிகாவாக ரேஷ்மா நடித்து வருகின்றனர்.
தற்போது 2வது திருமணம் செய்துள்ள சதிஷ், மனைவி ரேஷ்மாவுடன் விவாகரத்து செய்த மனைவி சுசித்ராவுடன் ஒரே வீ்ட்டில் வசித்து வருகிறார்.
ஒவ்வொரு நாளும் அடுத்து என்ன நடக்கும் என சுவாரசியாக கதையை நகர்த்திக் கொண்டிருக்கிறார் இயக்குனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் சதிஷ், சீரியலை விட்டு விலகப்போவதாக தகவல்கள் வெளியானது.
இதனை தொடர்ந்து ராதிகாவும் ரசிகர்களுடன் உரையாடும் போது, நானே சீரியலில் இருப்பேனா இல்லையா என்பது எனக்கு தெரியாது என கூறியதால் ரசிகர்கள் மேலும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.