பாண்டியன் ஸ்டோர்ஸில் குடும்ப பெண்ணாக வந்து கலக்கும் தனமாக இது? அருவிக்கு நடுவில் குத்தாட்டம்..ஷாக்கில் ரசிகர்கள்!
நடு காட்டில் நின்று அருவியில் குதித்து குதித்து குத்தாட்டம் போடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியலில் சகோதரர்களின் ஒற்றுமையையும் வாழ்க்கையை எப்படி நடத்த வேண்டும் என்பதனையும் அழகாக சமூகத்திற்கு எடுத்து கூறப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் பாண்டியன் ஸ்டோர்ஸில் கண்ணன் செய்த தவறிற்காக கதிர் பொலிஸ் நிலையத்தில் இருக்கிறார்.
ரூபா. 5 இலட்சம் கொடுத்தால் தான் கதிரை வெளியில் விடுவார்கள் என பொலிஸார் கூறிவிட்டார்கள். இதனால் மூர்த்தி எப்படி பணத்தை தேடுவது என குழப்பத்தில் இருக்கிறார்.
குத்தாட்டம் போடும் காட்சி
இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸில் முக்கிய வேடத்தில் நடிக்கும் தனம் அவரின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில், நடு காட்டில் நின்று அருவியில் குதித்து குதித்து நடமாடியுள்ளார்.
இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த இணையவாசிகள்.“ 40 வயதில் இது தேவையா? என தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.