விக்னேஷ் சிவனின் தங்கையைப் பார்த்ததுண்டா? நாத்தனாருக்கு நயன் அளித்த நகைகள்! வைரல் புகைப்படம்
நயன்தாராவை திருமணம் செய்து கொண்ட விக்னேஷ் சிவனின் தங்கை புகைப்படம் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
நயன் விக்கி திருமணம்
எட்டு ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து கடந்த 9ம் தேதி பெற்றோர்கள் சம்மதத்துடன் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர் நயன்தாரா மற்றம் விக்னேஷ் தம்பதிகள்.
இவர்கள் திருமணம் முடிந்தது முதலே இவர்களைப் பற்றிய தகவல் இணையத்தில் அதிகமாக தேடப்படுவதுடன், பயங்கர வைரலாகியும் வருகின்றது.
குறித்த தம்பதிகளின் திருமணத்திற்கு பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில், பல விலை உயர்ந்த பரிசுகளையும் வழங்கியுள்ளனர்.
அதே போன்று திருமணத்திற்கு வாழ்த்த வந்த உறவினர்கள் மற்றும் பிரபலங்கள் அனைவருக்கு நயன்தாரா வெள்ளி மற்றும் தங்க பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது.
இந்த திருமணத்தில் அதிகமாக பேசப்பட்ட ஒன்று என்னவெனில் நயன்தாரா அணிந்திருந்த புடவை மற்றும் நகைகள் தான். குறித்த நகையை விக்னேஷ் சிவன் பரிசாக வழங்கியுள்ளாராம்.

திருப்பதி கோவிலில் ஏற்பட்ட சர்ச்சை
திருமணம் முடிந்த மறுதினம் நயன் விக்கி தம்பதிகள் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்றதுடன், அங்கு சில புகைப்படங்களையும் எடுத்தனர்.
இதில் நயன்தாரா கோவிலின் முன்புறம் காலணி அணிந்து போட்டோஷுட் நடத்தியிருந்தனர். இது பெரும் சர்ச்சையை எழுப்பிய நிலையில், விக்னேஷ் சிவன் மன்னிப்பு கேட்டு பதிவு ஒன்றினை வெளியிட்டிருந்தார்.

விக்னேஷ் சிவன் தங்கை புகைப்படம்
இந்நிலையில் விக்னேஷ் சிவன் அம்மா மற்றும் தங்கையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. திருமணத்தில் நயன்தாரா விக்கியின் தங்கைக்கு 30 பவுன் தங்கநகை பரிசாக கொடுத்துள்ளனர்.
முன்பு நடிகை நயன்தாராபேட்டி ஒன்றில் விக்னேஷ் சிவனின் தங்கை மற்றும் அம்மா குறித்து கூறுகையில், விக்னேஷ் சிவன் தனது தங்கை மற்றும் அம்மா மீது அதிக பாசம் வைத்திருக்கிறார்.
ஒவ்வொரு நாளும் சாப்பிடும் போது அவர்கள் இருவரும் சாப்பிட்டு விட்டார்களா என்று கேட்ட பிறகு தான் சாப்பிடுவார்.
அம்மா மற்றும் தங்கை மீது அந்த அளவுக்கு பாசம் வைத்திருப்பவர் என்னையும் நன்றாக கவனித்துக் கொள்வார் என்று தான் நான் அவரை காதலிக்கத் தொடங்கியதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
