தாலி கட்டிய நேரம் சரியில்லை... குளிகை நேரத்தில் திருமணம் செய்த நயன் - விக்னேஷ் ஜோடிக்கு என்ன நடக்கும் தெரியுமா?
பிரம்மாண்டமாக நடைபெற்ற நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தைப் பற்றிதான் பலரும் பேசிக்கொண்டிருக்கின்றனர்.
தங்களின் திருமணத்திற்காக ஒரு லட்சம் பேருக்கு விருந்து போட்டிருக்கிறார்கள்.
ஐந்து புரோகிதர்கள் மந்திரம் ஓத இந்து முறைப்படி நயன்தாராவின் கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலி கட்டியது நல்ல நேரமா? என்று பலரும் இப்போது கேள்வி எழுப்பியுள்ளனர்.
சினிமா பிரபலங்களில் திருமணம் என்றாலே அது ஊடகங்களில் பரபரப்பாக எழுதப்படும்.
சமூக வலைத்தளங்களில் அதுதான் ட்ரெண்டிங் ஆக இருக்கும். நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமண செய்திதான் இப்போது சமூக வலைத்தளங்களில் ஹாட் டாபிக் ஆக பேசி வருகின்றனர்.
பல ஆண்டுகள் காதலித்து கோவில் கோவிலாக போய் பரிகாரம் செய்து பல புரோகிதர்கள் வேத மந்திரங்கள் ஓத என்னதான் பார்த்து பார்த்து கல்யாணம் நடந்தாலும் ஜோதிட சாஸ்திரப்படி சில தவறுகள் நடந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் உலா வருகின்றன.
திருமண தேதி ஜூன் 9,2022
நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் கடலோரத்தில் பிரம்மாண்ட கண்ணாடி மாளிகையில் நடந்துள்ளது.
திருமணம் நடைபெற்ற தேதியின் கூட்டுத் தொகை 3 வருவதால் சிறப்பானது அல்ல என்றும் 50 சதவிகிதம் மட்டுமே வெற்றியைத் தரும் என்று கணித்திருந்தனர்.
வியாழக்கிழமை சரியான நாள் அல்ல என்றும் அதோடு குளிகை நேரத்தில் திருமணம் நடந்தது என்றும் கூறி வருகின்றனர்.
தாலி கட்டிய நேரம் சரியில்லையா?
ஜூன் 9ஆம் தேதியன்று வியாழக்கிழமை காலை 10.20 மணிக்கு நயன்தாராவின் கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலி கட்டியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வியாழக்கிழமை காலை 9 மணி முதல் 10.30 மணி வரை குளிகை நேரம் வருகிறது.
அந்த நேரத்தில் எது செய்தாலும் திரும்ப திரும்ப நடைபெறும் என்பது ஜோதிட விதியாகும்.
புதன்ஹோரையில் திருமணம் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் 11 மணி வரை புதன்ஹோரை நேரமாகும்.
அந்த நேரத்தில் திருமணம் நடந்துள்ளது.
கௌரி பஞ்சாங்கப்படி பார்த்தால் அந்த நேரம் சோரம் என்று உள்ளது. மொத்தத்தில் பிரம்மாண்டமாக பார்த்து பார்த்து நடைபெற்ற திருமணத்தில் பலவித குளறுபடிகள் நடந்துள்ளதாகவே சமூக வலைத்தளங்களில் செய்திகள் பதிவிடப்பட்டு வருகின்றன.
கைகொடுக்கும் பரிகாரங்கள்
நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜாதகத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே இருவரும் இணைந்து பல கோவில்களுக்கு சென்று வழிபட்டு பரிகாரங்களைச் செய்துள்ளனர்.
இந்து முறைப்படி நடைபெற்ற திருமணத்தில் சில குறைகள் இருந்தாலும் அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாமல் பரிகாரங்கள் கை கொடுக்க வேண்டும் என்பதே நயன்தாரா, விக்னேஷ் சிவன் ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.