மாளவ்ய ராஜயோகத்தால் செல்வந்தராகும் அதிர்ஷ்ட ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா?
venus transit in libra : ஜோதிடத்தின் அடிப்படையில் நவகிரகங்களில் அசுரர்களின் குருவாகக் கருதப்படுபவர் சுக்கிரன். அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக விளங்கும் இவர், ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார்.
தற்போது கன்னி ராசியில் வக்ர நிலையில் பயணிக்கும் சுக்கிரன், நவம்பர் 14 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைகிறார். அதன்பின் நவம்பர் 22 ஆம் தேதி தனது சொந்த ராசியான துலாம் ராசிக்குள் நுழையும் சுக்கிரன், 2027 ஜனவரி 01 ஆம் தேதி வரை அங்கு பயணித்து, பின்னர் விருச்சிக ராசிக்குச் செல்கிறார்.

சுக்கிரன் தனது சொந்த ராசியில் சஞ்சரிப்பதால், பஞ்சமகாபுருஷ யோகங்களில் ஒன்றான மாளவ்ய ராஜயோகம் உருவாகிறது.
இந்த ராஜயோகத்தால் சில ராசிக்காரர்கள் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்போவதாகவும், தொழில் ரீதியில் வளர்ச்சியடைய போவதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், நவம்பர் 22 ஆம் தேதி துலாம் ராசிக்குச் செல்லும் சுக்கிரனால் அதிர்ஷ்டமும் வாழ்வில் முன்னேற்றமும் பெறப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
சிம்மம்

சிம்ம ராசியின் 3ஆம் வீட்டிற்கு சுக்கிரன் செல்வதால், தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைப்பதுடன், வியாபாரத்தை விரிவுபடுத்தும் சந்தர்ப்பங்களும் அமையும்.
அலுவலகத்தில் உங்களின் கடின உழைப்புக்கும் திறமைக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கும். எதிரிகளை வெல்லும் வாய்ப்பும் உண்டாகும்.
உடன்பிறந்தவர்களுடனான உறவு மேம்படும். பயணங்கள் மூலம் நிதி ஆதாயம் கிடைக்கலாம். மன அழுத்தத்தால் தடைப்பட்டிருந்த காரியங்களும் வெற்றிகரமாக நிறைவேறும்.
விருச்சிகம்

விருச்சிக ராசியின் 12ஆம் வீட்டிற்கு சுக்கிரன் செல்வதால், நிதி ரீதியாகப் பல சாதகமான மாற்றங்கள் ஏற்படும். புதிய வருமான வழிகள் உருவாகி, பொருளாதார நிலை மேம்படும்.
ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவிக்கும் வாய்ப்பும் கிடைக்கும். வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு இக்காலம் சாதகமாக அமையும். வேலையில் இருப்பவர்களுக்குப் புதிய முன்னேற்ற வாய்ப்புகள் கிடைக்கும்.
காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமானவர்கள் துணையுடன் இனிய நேரத்தைச் செலவிடுவார்கள். தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல நேர்மறையான மாற்றங்களைக் காண்பீர்கள்.
கடகம்

கடக ராசியின் 4ஆம் வீட்டிற்கு சுக்கிரன் செல்வதால், பொருள் வசதிகள் அதிகரிக்கும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் கனவு நனவாகலாம். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். தாயுடனான உறவு மேலும் வலுப்பெறும். பணியிடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிப்பதுடன், உங்களின் கடின உழைப்பை உயர் அதிகாரிகள் பாராட்டுவார்கள்.
இதனால் தன்னம்பிக்கை அதிகரித்து, எதிர்காலத்தில் மேலும் சிறப்பாகச் செயல்படுவதற்கான ஊக்கமும் புத்துணர்வும் கிடைக்கும். குறிப்பாக நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |