Actress Samantha: கர்ப்பகால புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சமந்தா... இவ்வளவு எளிமையா?
Samantha Pregnancy Photo: நடிகை சமந்தா மிகவும் எளிமையாக தனது கர்ப்பக்கால புகைப்படத்தினை வெளியிட்டுள்ளது ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்துள்ளது.
நடிகை சமந்தா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருகின்றார் சமந்தா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உட்பட பல மொழி படங்களிலும் பிரபலமாகியுள்ளார்.
தனது தனித்துவமான நடிப்பினால் ரசிகர்களைக் கவர்ந்த இவர் இயக்குனர் ராஜ் நிடிமோருவை கடந்த 2005ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ம்தேதி திருமணம் செய்தார். இவர்களின் திருமணம் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றது.

இந்நிலையில் சமீபத்தில் இந்த தம்பதியினர் பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு நிகழ்வினை நடத்தினர். நடிகை சமந்தா கடந்த ஜுன் மாதம் மா இன்டி பங்காரம் என்ற படத்தின் வெற்றி விழாவின் போது தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியினை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
தற்போது மகப்பேறு காலத்தினை நெருங்கி வரும் நிலையில், தான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை அனைத்தும் முடிப்பதற்கு வேகம் காட்டி வருகின்றார்.
பின்பு சில காலம் நடிப்பிலிருந்து விலகியிருந்து குழந்தை பெற்ற பின்பு, மீண்டும் சினிமாவிற்கு திரும்புவதாக தெரிவித்தார்.
சமந்தாவின் எளிமையான மகப்பேறு புகைப்படம்
நடிகை சமந்தா தற்போது எளிமையான தனது மகப்பேறு புகைப்படத்தினை இணையத்தில் வெளியிட்டுள்ளது ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்துள்ளது.
பொதுவாக பிரபலங்கள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் அடிக்கடி புகைப்படங்கள் எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இதற்காக அவர்கள் தயார் ஆவதும் மிகவும் ஆடம்பரமான உடையிலும், மேக்கப்பிலும் காணப்படுவார்கள்.
ஆனால் நடிகை சமந்தா இதற்கு மாறாக மிகவும் எளிமையான முறையில் தனது கர்ப்பகால புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். அதாவது சோபாவில் இயல்பாக அமர்ந்திருந்து தனது வயிறை பிடித்தபடி போஸ் கொடுத்துள்ளார்.

அதுமட்டுமின்றி சாதாரணமாக சிவப்பு நிற மேலாடையும், வெள்ளை நிற பேண்ட் மற்றும் கருப்பு நிற கண்ணாடி அணிந்து புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
மேலும் தான் வெளியிட்ட புகைப்படத்துடன், இதையே எனது மகப்பேறு போட்டோஷுட்டாக எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சமந்தா பகிர்ந்துள்ள இந்த புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |