Chicken Pickle : காரசாரமான சிக்கன் ஊறுகாய் ரெசிபி! வீட்டிலேயே எளிதாக செய்து அசத்துங்கள்!

Healthy Food Recipes Chicken
By Vinoja Nov 10, 2026 04:30 PM GMT
Report

Easy Chicken Pickle Recipe : அசைவ உணவுகளை விரும்புவோரின் உணவுப் பட்டியலில் சிக்கனுக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. பிரியாணி, வறுவல், கிரேவி என எந்த வகையில் சமைத்தாலும் அதன் சுவைக்கு ரசிகர்கள் ஏராளம்.

குறிப்பாக, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் கவரும் உணவாக சிக்கன் இருந்து வருகிறது. அந்த வகையில், வழக்கமான சிக்கன் உணவுகளிலிருந்து சற்று வித்தியாசமாகவும், நாவுக்கு விருந்தளிக்கும் வகையிலும் காரசாரமான சிக்கன் ஊறுகாயை வீட்டிலேயே தயாரித்துப் பார்க்கலாம்.

Chicken Pickle : காரசாரமான சிக்கன் ஊறுகாய் ரெசிபி! வீட்டிலேயே எளிதாக செய்து அசத்துங்கள்! | Tasty And Spicy Chicken Pickle Recipe

தூங்கினால் இவ்வளவு பணமா? 60 நாட்களில் லட்சாதிபதியான பெண்!

தூங்கினால் இவ்வளவு பணமா? 60 நாட்களில் லட்சாதிபதியான பெண்!

சாதம், தயிர் சாதம் எனப் பல உணவு வகைகளுடன் சேர்த்துச் சாப்பிட அசத்தலாக இருக்கும் இந்த சிக்கன் ஊறுகாயை எளிய முறையில் எப்படித் தயாரிப்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

எலும்பு இல்லாத சிக்கன் – 300

கிராம் மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி

மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி (தனித்தனியாகப் பயன்படுத்தவும்)

உப்பு – தேவையான அளவு

நல்லெண்ணெய் – ¼ கப் + சிறிதளவு இஞ்சி பூண்டு விழுது 

எலுமிச்சை சாறு – 2 மேசைக்கரண்டி

Chicken Pickle : காரசாரமான சிக்கன் ஊறுகாய் ரெசிபி! வீட்டிலேயே எளிதாக செய்து அசத்துங்கள்! | Tasty And Spicy Chicken Pickle Recipe

வறுத்து அரைக்கத் தேவையான பொருட்கள்

கடுகு – ½ தேக்கரண்டி

வெந்தயம் – ½ தேக்கரண்டி

சீரகம் – 1 தேக்கரண்டி

மல்லி – 1 தேக்கரண்டி

பட்டை – சிறிய துண்டு

ஏலக்காய் – 3

கிராம்பு – 3

அன்னாசிப்பூ – 1

Chicken Pickle : காரசாரமான சிக்கன் ஊறுகாய் ரெசிபி! வீட்டிலேயே எளிதாக செய்து அசத்துங்கள்! | Tasty And Spicy Chicken Pickle Recipe

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் சிக்கனைச் சேர்த்து, அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து 30 நிமிடங்கள் ஊறவிட வேண்டும்.

இதற்கிடையில், வறுத்து அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, நல்ல மணம் வரும் வரை வறுத்து ஆறவிடவும். பின்னர் அவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாகப் பொடித்துக்கொள்ளவும்.

Chicken Pickle : காரசாரமான சிக்கன் ஊறுகாய் ரெசிபி! வீட்டிலேயே எளிதாக செய்து அசத்துங்கள்! | Tasty And Spicy Chicken Pickle Recipe

டிசம்பர் 02 வரை நீடிக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட்!

டிசம்பர் 02 வரை நீடிக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட்!

அடுத்து, ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து ¼ கப் நல்லெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் ஊறவைத்த சிக்கனைச் சேர்த்து, பொறுமையாகப் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். 

பின்னர் அதே எண்ணெயில் தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்த்து, ஒரு தேக்கரண்டி மிளகாய்த்தூள் மற்றும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.

அதன் பிறகு பொரித்துவைத்த சிக்கனையும் சேர்த்து மசாலாவுடன் நன்றாகக் கலக்கவும். தொடர்ந்து அரைத்து வைத்துள்ள மசாலாப் பொடியைச் சேர்த்து, அதிக தீயில் நன்றாகக் கிளறி வேகவிடவும்.

மசாலா சிக்கனுடன் நன்கு கலந்து வாசனை வரத் தொடங்கியதும், இறுதியாக எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாகக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கினால், அவ்வளவுதான் சுவையான, காரசாரமான சிக்கன் ஊறுகாய் தயார். 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US