டிசம்பர் 02 வரை நீடிக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட்!
Lakshmi Narayan Rajyoga: ஜோதிட சாஸ்திஜரத்தின் அடிப்படையில், அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக விளங்குபவர் சுக்கிரன். இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார்.
அதேபோல், கிரகங்களின் இளவரசனாகக் கருதப்படும் புதன், புத்திசாலித்தனம், பேச்சு, கல்வி மற்றும் வியாபாரத்தின் காரணியாக விளங்குகிறார். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார்.

தூக்கத்தைப் புறக்கணிப்பதால் சருமத்திற்கும் கூந்தலுக்கும் ஏற்படும் பாதிப்புகள் என்ன? நிபுணர்கள் எச்சரிக்கை!
இவ்விரு கிரகங்களின் சேர்க்கையால் உருவாகும் மங்களகரமான யோகமே லட்சுமி நாராயண ராஜயோகம். இந்த ராஜயோகம் நவம்பர் 22 ஆம் தேதி உருவாகவுள்ளது.
அன்றைய தினம் சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசிக்குள் நுழைகிறார். ஏற்கனவே அங்கு இருக்கும் புதனுடன் சுக்கிரன் இணைவதால் இந்த ராஜயோகம் ஏற்படுகிறது.

இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் இருந்தாலும், 4 ராசிக்காரர்கள் வேலையில் முன்னேற்றம், வருமான உயர்வு என பல நன்மைகளைப் பெறவுள்ளனர்.
டிசம்பர் 02 ஆம் தேதி வரை நீடிக்கும் இந்த யோகத்தால், தொழில் மற்றும் நிதி ரீதியில் உச்சகட்டஅதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசியின் 7-ஆவது வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதன் காரணமாக, இந்த ராசியில் பிறந்தவர்கள் நீண்ட காலமாக எதிர்கொண்டு வந்த பெரிய பணப் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு கணிசமான லாபம் கிடைக்கும். இதனால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.
ஏற்கனவே செய்த முதலீடுகள் மூலமாகவும் நல்ல வருமானம் கிடைக்கும். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும்.
ரிஷபம்

ரிஷப ராசியின் 6-ஆவது வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாகக் கிடைக்கும்.
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணிகள் வெற்றிகரமாக நிறைவேறும். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் உரிய அங்கீகாரத்தை பெற வாய்ப்பு அமையும்.
வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.நிதி நிலைமை படிப்படியாக வலுப்பெறுவதுடன், ஆடம்பரமான வாழ்க்கையை வாழும் சூழலும் தானாக உருவாகும்.
கன்னி

கன்னி ராசியின் 2-ஆவது வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்குத் தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும்.
நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கலாம். வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்ததைவிட அதிக லாபம் கிடைக்கும்.
திடீர் பணவரவும் ஏற்படலாம். உங்களின் சிறந்த முடிவெடுக்கும் திறன் காரணமாகப் பணியிடத்தில் சாதகமான பலன்களை அனுபவிப்பீர்கள்.
துலாம்

துலாம் ராசியின் முதல் வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த யோகம் துலாம் ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமான பலன்களைத் தரக்கூடியதாக இருக்கும்.
இதன் மூலம் நிதி நிலைமை மேம்படுவதுடன், புதிய வருமான வாய்ப்புகளும் உருவாகலாம். பணிபுரிபவர்களுக்குப் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற நன்மைகள் கிடைக்கும்.
வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான புதிய வாய்ப்புகளும் தேடி வரலாம். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிப்பதுடன், குடும்ப உறவுகளிலும் அன்பும் சந்தோஷமும் நிறைந்திருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |