விசாக நட்சத்திரத்திற்கு செல்லும் புதன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்!
mercury transit in vishaka nakshatra : நவகிரகங்களில் புதன் அறிவு, வணிகம், பேச்சு மற்றும் தகவல் தொடர்புக்கு அதிபதியாகக் கருதப்படுகிறார். இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகரும்போது, அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கம் ஏற்படும் என்பது ஜோதிட நம்பிக்கை.
தற்போது துலாம் ராசியில் உள்ள சுவாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் புதன், நவம்பர் 25ஆம் தேதி விசாக நட்சத்திரத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார்.

இந்த நட்சத்திர மாற்றம் சில ராசிக்காரர்களுக்குச் சாதகமான பலன்களையும், சிலருக்குப் பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும்.
குறிப்பாக, சில ராசிக்காரர்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையில் பல்வேறு தடைகளையும் சவால்களையும் சந்திக்க நேரிடலாம் என ஜோதிட நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது.
அப்படி புதனின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சியால் தொழில் மற்றும் நிதி ரீதியில் அதிகளவில் பாதிப்புகளைச் சந்திக்கக்ப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்

கடக ராசிக்காரர்கள் இந்த நட்சத்திர மாற்றத்தால் பல சவால்களைச் சந்திக்க நேரிடும். எனவே, இந்தக் காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் நஷ்டம் ஏற்படலாம். வேலைகளில் தாமதம் ஏற்படுவதுடன், ஏற்கெனவே கடனாகக் கொடுத்த பணத்தைத் திரும்பப் பெறுவதிலும் சிக்கல்கள் நேரிட அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.
வேலை தேடுபவர்களுக்குப் புதிய வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். தொழில் மற்றும் வேலை சார்ந்த முயற்சிகளிலும் தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வேலைப்பளுவால் மன அழுத்தமும் சோர்வும் ஏற்படடும்.
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த நட்சத்திர மாற்றம் சாதகமாக இருக்காது. குறிப்பாக, திருமண வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்.
தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகளும் வாக்குவாதங்களும் அதிகரித்து, பிரிவுவரை செல்லக்கூடும். விருப்பமில்லாத சில செயல்களைச் சூழ்நிலை காரணமாகச் செய்ய வேண்டி ஏற்படலாம்.
நிதி ரீதியாகவும் சவால்கள் அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். இதனால் மனக்குழப்பமும் மன அழுத்தமும் அதிகரிக்கும்.
கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த நட்சத்திர மாற்றம் சோதனைகள் நிறைந்த காலமாக அமையலாம். எனவே, கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.
தேவையற்ற செலவுகளைக் குறைக்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில் நிதி நெருக்கடி அதிகரிக்க வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.
திருமண மற்றும் காதல் வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க, உங்கள் நடத்தையில் மிகுந்த கவனம் தேவை. உறவுகளிடம் வெளிப்படையாக இருப்பது நல்லது. புதிய முயற்ச்சிகளை இந்த காலகட்டத்தில் முடிந்தவரை தவிர்ப்பது சிறப்பு.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |