வாயுத்தொல்லையை குணமாக்கும் வெள்ளைப்பூண்டு குழம்பு
வெள்ளைப் பூண்டானது நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்தது. வாயுத் தொல்லை, நெஞ்சுக்குத்தல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத்தரும்.
இனி வெள்ளைப் பூண்டில் குழம்பு வைப்பது எவ்வாறு என்று பார்ப்போம்...
image - Yummy Tummy Aarthi
தேவையான பொருட்கள்
உரித்த வெள்ளைப்பூண்டு - 1 கப்
நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - 2 மேசைக்கரண்டி
புளித் தண்ணீர் - முக்கால் கப்
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு
வெந்தயம் - கால் தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
மிளகு - கால் தேக்கரண்டி
image - You tube
அரைப்பதற்கு
சீரகம் - அரை தேக்கரண்டி
வெள்ளைப் பூண்டு - 4 பற்கள்
மிளகு - அரை தேக்கரண்டி
செய்முறை
முதலில் மிளகாய்த் தூளை புளி தண்ணீரில் கட்டியில்லாமல் கரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அரைக்கக் கொடுத்துள்ளவற்றை சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
அதற்கடுத்ததாக, அடிகனமான ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி வெந்தயம், கடுகு, சீரகம், மிளகு அனைத்தையும் போட்டு தாளிக்கவும்.
பின்பு அத்துடன் வெள்ளைப் பூண்டுகளை உரித்து நன்றாக சிவக்கும்வரை வதக்கவும்.
அதற்கடுத்ததாக அதில் தயாரித்து வைத்துள்ள கரைசலை ஊற்றி, அரைத்து வைத்திருக்கும் விழுது மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
எண்ணெய் மேலே பிரிந்து வரும்வரை கொதிக்க விட்டு இறக்கவும். இப்போது சூப்பரான வெள்ளைப் பூண்டு குழம்பு தயார்.
image - Pothunalam.com