10 நிமிடத்தில் சுவையான வெந்தய கீரை மசால் செய்வது எப்படி?
உருளைக்கிழங்குடன் வெந்தயக்கீரையை சேர்த்து ரெசிபி செய்து, சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சாப்பிட்டால் சுவை ஏகபோகமாக இருக்கும். மேலும், வெந்தயக்கீரை மற்றும் உருளைக்கிழங்கை வைத்து செய்யக்கூடிய ரெசிபியை இன்று தெரிந்துகொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் - 1 கரண்டி,
சீரகம் - 1/2 கரண்டி,
வெள்ளைப்பூண்டு - 10 பற்கள்,
பச்சை மிளகாய் - 3
முதல் 4, உருளைக்கிழங்கு - 1/2 கிலோ,
வெந்தயக்கீரை - 250 கிராம்,
மல்லித்தூள் - 2 கரண்டி,
மஞ்சள்தூள் - 1/2 கரண்டி,
மிளகாய் தூள் - 1 கரண்டி,
மாங்காய் தூள் - 1/2 கரண்டி,
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் எடுத்துக்கொண்ட வெந்தயக்கீரை, பச்சை மிளகாய், வெள்ளைப்பூண்டு ஆகியவற்றை நறுக்கி கொள்ளவும். அதன் பின்னர் உருளைக்கிழங்கை குக்கரில் சேர்த்து நீர் ஊற்றி, 1 கரண்டி உப்பு சேர்த்து 3 முதல் 4 விசில் வந்ததும் இறக்கி, உருளைக்கிழங்கின் தோலினை உரித்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
பின்னர், வாணெலியை எடுத்து எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கருகு உளுந்து, சீரகம், மிளகு, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். இதற்குப்பின் மல்லித்தூள், மஞ்சள் தூள் மற்றும் மிளகாய்தூள், மாங்காய் தூள், உப்பு தேவையான அளவு சேர்த்து 2 முதல் 3 நிமிடம் வரை கிளற வேண்டும்.
இதனையடுத்து, வேக வைத்திருக்கும் உருளைக்கிழங்கு மற்றும் வெந்தயக்கீரையை குறைந்தளவு நெருப்பில் 10 நிமிடம் கீரை வேகும் வரை மேலே உள்ள கலவையுடன் சேர்த்து இறக்கினால் சுவையான வெந்தயக்கீரை உருளைக்கிழங்கு மிக்ஸ் ரெடி.
இதனை குழந்தைகளுக்கு புதிய ரெசிபி என்று கொடுத்தால், அவர்களும் சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவார்கள். உடலுக்கு நன்மைகள் கிடைக்கும்.