இலங்கையை தாயகமாக கொண்ட கனகாம்பரம்! மருத்துவ ரகசியங்கள்
நாம் காலங்காலமாக பயன்படுத்தி வந்த, ஆனால் தற்போது முற்றிலுமாக மறந்துவிட்ட ஒரு பூ கனகாம்பரம்.
நம் அம்மாக்கள் காலத்தில் பெரும்பாலானவர்கள் தலையில் சூடும் பூ கனகாம்பரம், ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் நிறங்களில் காணப்படும் கனகாம்பரம் இதன் நிறத்திற்காகவே பெயர் பெற்றது.
இந்த பூவின் தாயகம் இலங்கை, தற்போது இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் அதிகம் விளைவிக்கப்படுகிறது.
மருத்துவ பயன்கள்
வெறும் தலையில் சூடி அழகு பார்ப்பதாக மட்டுமல்லாமல், காயங்களை குணப்படுத்தும் மருத்துவ குணம் இந்த பூவிற்கு உண்டு.
கனகாம்பர பூவுடன் மிளகுத்தூளை கலந்து பேஸ்ட் போல் ஆக்கிவிட்டு காயங்கள் மீது தடவினால் குணமாகும்.
அன்றைய நாட்களில் இரும்பு பொருள் துருப்பிடிக்காமல் இருக்க கனகாம்பரத்தின் பேஸ்ட் பயன்படுத்தப்பட்டதாம்.
நம் உடலில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியா, வைரஸ், ஈஸ்ட் தொற்றுகளை குறைக்கும் தன்மையும் கனகாம்பரத்திற்கு உண்டு.
ஒவ்வாமை, வாந்தி வராமல் தடுப்பதற்கும் முக்கியமான மருந்தாக கனகாம்பரத்தை பயன்படுத்தி வந்துள்ளார்.
அத்துடன் தலைவலி மற்றும் தலை பாரத்தைச் சரிசெய்யும் கனகாம்பரத்தில் மாலை செய்து அணிந்தால் இதயம் நலம்பெறும் என்பது கூடுதல் தகவல்.