டைப்-2 நீரிழிவு நோயாளிகள் புளி சாப்பிடலாமா? இனி தெரிஞ்சிக்கோங்க....!
டைப்-2 சர்க்கரை நோயாளிகள் தங்களின் உணவு முறையில் குறிப்பிட்ட மாற்றங்களை ஏற்படுத்துவது, அவர்களின் இரத்த சர்க்கரை பராமரிப்பில் முக்கிய பங்கை வகிக்கிறது.
எனவே தான் சர்க்கரை நோயாளிகளை உண்ணும் உணவுகளில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.
சில உணவுகள் இரத்த சர்க்கரை அளவை மோசமான அளவில் உயர்த்தும். எனவே தான் சர்க்கரை நோயாளிகள் எந்த ஒரு உணவை உண்பதற்கு முன்பும், அது பாதுகாப்பானதா அல்லது இல்லையா என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
டைப்-2 நீரிழிவை குணப்படுத்தும் உணவுகளில் புளியும் ஒன்று.
சமையலில் புளி முக்கிய இடம் வகிக்கிறது. நல்ல புளிப்புச் சுவையுடன் இருக்கும் புளி ஒரு நார்ச்சத்துள்ள பழம். இதில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
அதில் மக்னீசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி1, வைட்டமின் பி2 மற்றும் வைட்டமின் பி3 போன்றவை மிகவும் அதிகமாகவும், வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் பி6, வைட்டமின் பி5, ஃபோலேட், காப்பர் மற்றும் செலினியம் போன்றவையும் அடங்கும்.
டைப்-2 சர்க்கரை நோயாளிகள் புளி சாப்பிடலாமா?
சர்க்கரை நோயாளிகளுக்கு புளி மிகவும் பாதுகாப்பானது. ஏனெனில் புளியில் கிளைசீமிக் இன்டெக்ஸ் 23 தான் உள்ளது. இது மிகவும் குறைவான அளவாக கருதப்படுகிறது.
அதே சமயம் புளியில் நார்ச்சத்து மட்டுமின்றி, பிற ஊட்டச்சத்துக்களும் உள்ளன. இந்த பண்புகள் ஒட்டுமொத்த புளியை ஆரோக்கியமான ஒன்றாக மாற்றுவதோடு மட்டுமல்லாமல், இரத்தத்தில் சர்க்கரையை மெதுவாக வெளியிடுகிறது மற்றும் சட்டென்று இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க வழிவகுக்காது என்பதையும் உறுதி செய்கிறது.
புளி விதையின் சாறுகள் இயற்கையாக அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டவை மற்றும் அவை இரத்த சர்க்கரை அளவை நிலையாக பராமரிக்கவும், கணைய திசுக்களின் சேதத்தை மாற்றியமைக்கக்கூடியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் புளியில் ஆல்பா அமைலேஸ் என்னும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் நொதிப்பொருள் இருப்பதாக ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்பு
எனவே நீரிழிவு நோயாளிகள் புளியை உணவில் சேர்த்து கொள்ளலாம். அதேவேளை அளவு என்பது மிகவும் அவசியமான ஒன்று. அளவுக்கு மீறினால் விஷமாகிவிடும்...எச்சரிக்கை!