வெள்ளை முடிக்கு நிரந்தர தீர்வு வேண்டுமா? அப்போ இதை செய்திடுங்க
பொதுவாக மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் வெள்ளை முடி வளர ஆரம்பிக்கும்.
இது இயற்கையின் நியதி. ஆனால் சிலருக்கும் சிறு வயதிலேயே தலைமுடி நரைத்து காணப்படும். வயதானவர்களுக்கு நரைமுடி வரும் போதே ஒருவித கலக்கம் ஏற்படும்.
அப்படி இருக்கையில் இளம் வயதினருக்கு இந்த நரைமுடி வந்தால் அவர்களுடைய மனநிலையில் மாற்றம் ஏற்படும்.
இது போன்ற பிரச்சினைகளிலிருந்து விடுபட வேண்டும் என்றால் வெள்ளை முடி பிரச்சினையுள்ளவர்கள் குளிப்பதற்கு முன் இந்த பேக் போட்டால் நல்லது.
அப்படி என்ன பேக்? எப்படி போட வேண்டும்? என்பதனை தொடர்ந்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் துண்டு - கால் கப்
- மூசாம்பரம் - ஒரு கட்டி
செய்முறை
முதலில் தேங்காய் துண்டுகளை மிக்ஸி சாரில் போட்டு கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
பின்னர் நாம் எடுத்து வைத்திருக்கும் தேங்காய் பாலூடன் கட்டி மூசாம்பரம் கலந்து கொள்ளவும்.
சரியாக 4 மணி நேரத்திற்கு பின் எடுத்து பார்த்தால் பேஸ்ட் பதத்திற்கு தேங்காய் பால் மாறி விடும்.
இதனை குளிப்பதற்கு முன் தலையில் பேக்காக பயன்படுத்தவும். ஷாம்போ போட்டு பின்னர் கழுவிக் கொள்ளவும்.
1 மாதக்காலம் பயன்படுத்தினால் நல்ல மாற்றம் தெரியும். தொடர்ந்து பயன்படுத்துவதால் வெள்ளை முடி ஒழித்துக்கட்டலாம்.
முக்கிய குறிப்பு
குளிரூட்டியை பயன்படுத்தி பதப்படுத்தலாம்.