50 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் சதுர்கிரக யோகம்: இந்த 3 ராசியினருக்கு ஜாக்பாட் உறுதி!
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற சிறிய மாற்றங்கள் கூட 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.
அந்த வகையில் டிசம்பர் மாதத்தில் புதனும் சூரியனும் தனுசு ராசியில் இணையும் போது சக்திவாய்ந்த ராஜயோகம் உருவாவுள்ளதுடன், செவ்வாய் மற்றும் சுக்கிரன் சிம்ம ராசியில் நுழைவதாலும் ராஜ யோகம் உருவாகின்றது.

50 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகப்போகும் குறித்த ராஜயோகமானது சதுர்கிரக யோகம் என குறிப்பிடப்படுகின்றது. இதன் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் பிரபலித்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளில் வாழ்க்கையில் பல்வேறு வகையிலும் சாதக மாற்றங்களை ஏற்படுதப்போகின்றது.
அப்படி சதுர்கிரக யோகத்தால் எந்தெந்த ராசிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகின்றார்கள் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு குறித்த சதுர்கிரக யோகமானது வாழ்வில் பல்வேறு வகையிலும் சாதக மாற்றங்களை ஏற்படுத்தப்போகின்றது. குறித்த
குறித்த யோகத்தால் அவர்கள் தங்கள் வணிக வாழ்க்கையில் வெற்றியின் உச்சத்துக்கே செல்லப்போகின்றார்கள். தொழில் ரீதியாக சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
பெரிய முதலீடுகளிலிருந்து எதிர்பாராத அளவுக்கு வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் காணப்படுகின்றது. வீட்டுக்கு ஆடம்பர பொருட்களையும் தங்கம் வெள்ளி போன்றவற்றையும் வாங்கும் யோகம் அமையும்.
தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு குறித்த சதுர்கிரக யோகமானது பொருளாதார ரீதியில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தப்போகின்றது. பணவரவு எதிர்பார்ப்பை விட அதிகமாக இருக்கும்.
இது தனுசு ராசிக்காரர்களுக்கு செல்வ செழிப்பை அள்ளிக்கொடுக்கும் அற்புதமான காலகட்டமாக அமையும். வருமானத்துக்கான புதிய வழிகள் திறக்கும்.
திருமண வாழ்க்கையில் நீண்ட நாள்களாக இருந்துவந்த மன கசப்புகள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு சதுர்கிரக யோகமானது எதிர்பாராத நிதி உதவிகளை ஏற்படுத்திக்கொடுக்கப்போகின்றது.
பல எதிர்பாராத வாய்ப்புகளையும், பரிசுகளை பெற்று மனமகிழ்ச்சியடையும் காலகட்டமாக இது அமையப்போகின்றது.
இவர்களின் சமூக அந்தஸ்து உயரப்போகின்றது. புதிய கார் அல்லது வீடு வாங்குவது குறித்து நீண்ட நாட்கள் இருந்த யோசனையை எதிர்பாரத வகையில் நடத்தி முடிப்பதற்கான வாய்ப்புகள் கூடிவரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |