நகம், பல் சொத்தையாக மாறுதா? அப்போ இது தான் சரியான தீர்வு- செய்து பாருங்க!
பொதுவாக மனித உடலில் ஏதாவது சத்துக்கள் குறையும் போது வெளி உறுப்புக்களில் வித்தியாசம் காட்டப்படும்.
அந்த வகையில் உடலில் இருக்கும் முக்கிய கூறுகளில் ஒன்று தான் கால்சியம்.
இந்த சத்து உடலில் குறையும் போது ஏகப்பட்ட பக்க விளைவுகளை வெளி உறுப்புகளில் நீங்கள் காணலாம்.
குழந்தைகள் வளர்கின்ற பொழுது இந்த சத்து அவர்களின் வளர்ச்சியில் பெரிய பங்காற்றுகின்றது.
இதனால் எப்படி கால்சியம் சத்தை அதிகரிப்பது? அதனால் என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படுகின்றது? என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
கால்சியம் குறைபாடு
1. கால்சியம் சத்து மனித உடலில் குறையும் பொழுது, முதுகு வலி, மூட்டு வலி, நகம், பற்கள் பாதிப்பு ஏற்படுவதற்கான அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன.
2. இளம் வயதில் இருக்கும் ஆண்கள் நாள்தோறும் 1000 மி.கி கால்சியம் கொண்ட உணவுகளும், பெண்கள் 1300 மி.கி கால்சியம் கொண்ட உணவுகளும் எடுத்து கொள்வது அவசியமாகும்.
3. கால்சியம் சத்து உடம்பில் அளவில்லாமல் குறையும் பொழுது ஹைபோகால்சீமியா பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் ஆராய்ச்சிகளில் கண்டுபிடித்துள்ளார்கள்.
4. கால்சியம் குறைபாடு உள்ளவர்களுக்கு குழப்பம் மற்றும் ஞாபக மறதி அதிகரிக்கும்.
5. தசைப்பிடிப்பு, கை, பாதம், முகத்தில் உணர்ச்சி இல்லாமல் போதல் ஆகிய குறைபாடுகளுக்கு கால்சியம் சத்து குறைப்பாடு தான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது.
6. பால், காய்கறிகள், பழங்கள் அதிகமாக சாப்பிடுவதால் கால்சியம் சத்து அதிகரிக்கின்றது.
முக்கிய குறிப்பு
உங்கள் வீடுகளில் வளரும் குழந்தைகள் இருந்தால் கால்சியம் நிறைந்த உணவுகளை அடிக்கடி கொடுப்பது நல்லது.