அம்மாவையும், தங்கையையும் மொத்தமாக வெறுத்து ஒதுக்கும் வனிதாவின் மகன்!
வனிதாவிற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என அடிக்கடி சில செயல்களால் கூறி வருகிறார் வனிதாவின் மூத்த மகன் ஸ்ரீஹரி ஆகாஷ்.
வனிதா
தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவரும் மிகப் பெரிய திரைக்குடும்பத்தைச் சேர்ந்தவரும் தான் இந்த வனிதா விஜய்குமார். முதல் படமே தளபதியுடன் சந்திரலேகா எனும் திரைப்படத்தில் நடித்து பிரபலமாகியிருந்தார்.
தமிழ் சினிமாவில் சில படங்களில் மட்டுமே நடித்தவர், திருமணத்துக்குப் பின்னர் நடிப்பை கைவிட்டார். வனிதா கடந்த 2000ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
இவர்கள் இருவருக்கும் ஸ்ரீஹரி மற்றும் ஜோவிதா என்று இரு பிள்ளைகளும் இருக்கிறார்கள். வனிதாவின் முதல் திருமண வாழ்க்கை கருத்து முரண்பாடால் பிரிய அடுத்தடுத்து இரண்டு திருமணங்களை செய்துக் கொண்டார்.
ஆனால் எந்த வாழ்க்கையும் சரியாக அமையாமல் எல்லாமே விவாகரத்தில் தான் முடிந்தது. பின்னர் பிக்பொஸ் சீசன் 3 இல் கலந்துகொண்டதையடுத்து பிரபலமடைந்த அவர், தொடர்ச்சியாக குக் வித் கோமாளி சீசன் 1 இன் வெற்றியாளராகினார்.
அதன் பின்பு விஜய் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளிலும், சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
கண்டுக்கொள்ளாத அண்ணன்
இந்நிலையில் வனிதா மகனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் அதிகம் வைரலாகி வந்தது. அந்தப் புகைப்படத்தில் பலரும் ஸ்ரீஹரி அருண் விஜய்யைப் போல இருக்கிறார் என கமெண்ட் செய்து வந்தனர்.
அந்தவகையில் ஸ்ரீஹரியின் வைரல் புகைப்படத்திற்கு வனிதாவின் இரண்டாவது மகளும் ஸ்ரீஹரியின் தங்கையுமான ஜோவிதா அண்ணனின் புகைப்படத்திற்கு லைக் கொடுத்து பின்தொடர்வதாக அனுப்பியிருக்கிறார்.
ஆனால் ஸ்ரீஹரி தங்கையின் ரிக்வஸ்டை ஏற்றுக்கொள்ளமாலே இருக்கிறார். இதனை எப்படியோதெரிந்துக் கொண்ட நெட்டிசன்கள் அம்மாவை தங்கையையும் வேண்டாம் என் முடிவெடுத்து விட்டார் போல என கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.