குக்வித் கோமாளி சீசன் 3 எப்போது? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்
விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ரசிகர்கள் ஆவலாக எதிர்ப்பார்த்துகொண்டிருக்கும் நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.
நடந்து முடிந்த குக் வித் கோமாளி சீசன் 2 ஆனது டிஆர்பி-யில் முதலிடம் பிடித்து வந்தது. சீசன் 1-ல் வனிதா விஜயகுமாரும், சீசன் 2-ல் கனியும் வெற்றியாளராகினர்.
மேலும், சீசன் 3-யில் எப்போது யார் எல்லாம் கலந்துகொள்ளப்போகிறார்கள் என்பதில் ரசிகர்களும் ஆவலாகவே உள்ளனர்.
இதனிடையே, தற்போது விரைவில் இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கும் என தகவல்கிடைத்துள்ளது. மேலும், இதில் கோமாளிகளாக இரண்டாவது சீசனில் பங்கேற்றவர்கள் அனைவரும் பங்கேற்பார்கள்.
அதுமட்டுமல்லாமல் முரட்டு சிங்கிள் நிகழ்ச்சியில் இருந்து ஒரு கோமாளியும் குரோஸியும் கூடுதல் கோமாளிகளாக பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.