Vaccination schedule: பிறந்தது முதல் 18 வயது வரை போட வேண்டிய தடுப்பூசிகள்
பொதுவாக குழந்தைகள் பிறந்தது முதல் அவர்கள் வளர்ந்து 18 வயதை அடையும் வரை அந்நாட்டு அரசாங்கம் குழந்தைகளுக்கு சில தடுப்பூசிகளை வழங்குவது வழக்கம்.
குழந்தைகள் பிறந்தது முதல் அவர்கள் வளரும் பருவங்களில் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாக இருப்பதற்கும் போலியோ முதல் சின்னம்மை வரையிலான தடுப்பூசிகள் போடப்படுகின்றன.
இப்படியான மருத்துவ வசதிகள் கொடி நோய்களிலிருந்து குழந்தைகளை காப்பாற்றும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். குழந்தையின் வளர்ச்சி சரியானதாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்த தடுப்பூசியை போடுவது அவசியம்.
“தடுப்பூசி” என்பது குழந்தை பருவ நோய்த்தடுப்பு மருந்துகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இப்படியான தடுப்பூசிகளை அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் பரிந்துரைக்கும் எனவும் கூறப்படுகின்றது.
அந்த வகையில் குழந்தைகளுக்கு பிறந்தது முதல் 18 வயது வரை போட வேண்டிய தடுப்பூசி வகைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டிய காலங்கள்
பிறந்த குழந்தை | மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய ஐந்து நாட்களுக்குள் HBV தடுப்பூசியை மருத்துவமனையில் கொடுத்துவிடுவார்கள். |
2-4 வாரங்கள் | குழந்த பரிசோதனை செய்வார்கள் HBV கொடுக்கப்படவில்லை என்றால் 2 அல்லது 4 வாரங்களில் கொடுப்பார்கள். |
2 மாதங்கள் | குழந்தை பிறந்து 2 மாதங்கள் முடிவடைந்த பின்னர் குழந்தை பரிசோதனை , DTaP, Hib, IPV, PCV, HBV மற்றும் ரோட்டா வைரஸ் தடுப்பூசிகள் வழங்குவார்கள் |
4 மாதங்கள் | குழந்தை பரிசோதனை DTaP, Hib, IPV, PCV மற்றும் ரோட்டா வைரஸ் பூஸ்டர்கள் வழங்கப்படும். |
6 மாதங்கள் | குழந்தை பிறந்து 6ஆவது மாதம் முடிந்தவுடன் குழந்தை பரிசோதனை செய்த பின்னர் DTaP, HBV, Hib, IPV, PCV மற்றும் ரோட்டா வைரஸ் பூஸ்டர்கள் வழங்குவார்கள். |
9 மாதங்கள் | குழந்தைக்கு 9ஆவது மாதம் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது அவரின் எடை முதல் அவரின் அசைவுகள் வரை அனைத்தையும் மருத்துவர்கள் பரிசோதனை செய்வார்கள். |
12 மாதங்கள் | குழந்தை பிறந்து 12 ஆவது மாதத்தில் அவர்களுக்கு பரிசோதனை நடக்கும். அதன் பின்னர் இரத்த சோகை மற்றும் வேறு பல பரிசோதனை செய்வார்கள். அத்துடன் டிபி ஸ்க்ரீனிங், MMR, வெரிசெல்லா மற்றும் HAV தடுப்பூசிகள்; PCV பூஸ்டர் போன்றவை வழங்கப்படுகின்றன. |
15 மாதங்கள் | குழந்தை பிறந்து 15ஆவது மாதத்தில் அவர்களுக்கு உடல் பற்றிய பரிசோதனை செய்து விட்டு DTaP மற்றும் Hib பூஸ்டர்கள் வழங்கப்படுகின்றன. |
18 மாதங்கள் | குழந்தை பிறந்து 18 மாதங்கள் ஆனவுடன் அவர்களின் வளர்ச்சி பற்றி பரிசோதனைகள் நடக்கும். அத்துடன் அவர்களின் மன இறுக்கம் பற்றிய சோதனைகளும் நடக்கும். இதனை தொடர்ந்து HAV பூஸ்டர் தடுப்பூசி வழங்குவார்கள். |
24 மாதங்கள் | குழந்தை பிறந்து 24 மாதங்கள் ஆன பின்னர் அவர்களுக்கு 2 வயது ஆகி விடும். அப்போது அவர்களின் ஆரோக்கியம் பரிசோதனை செய்யப்படும். அத்துடன் காசநோய் குறித்த பரிசோதனைகளும் செய்வார்கள். |
30 மாதங்கள் | குழந்தை பரிசோதனை, வளர்ச்சி மற்றும் மன இறுக்கம் போன்றவை பரிசோதிக்கப்படும். |
3 ஆண்டுகள் | குழந்தைக்கு 3 வயது வந்தவுடன் அவர்களின் பார்வை, கேட்கும் திறன் போன்றவை குறித்த முழுமையான பரிசோதனை |
4-6 ஆண்டுகள் | குழந்தைக்கு மீண்டும் பார்வை பரிசோதனை. DTaP, IPV, MMR மற்றும் வெரிசெல்லா பூஸ்டர்கள் வழங்கப்படும். |
7-10 ஆண்டுகள் | குழந்தை பிறந்து முறையான சிகிச்சை கொடுத்து கொண்டு வரும் பொழுது 7-10 வயதிற்குள் பார்வை, செவித்திறன் மற்றும் டிபி குறித்த பரிசோதனை நடக்கும். இதற்கு முன்பு தவறவிட்ட நோய்த்தடுப்பு மருந்துகள் வழங்கப்படும். |
11-12 ஆண்டுகள் | வருடாந்த பரிசோதனை மற்றும் மனச்சோர்வு, காசநோய் பரிசோதனை நடத்தப்படும். அதன் பின்னர் DTaP, HPV மற்றும் MCV4 தடுப்பூசிகள் வழங்கப்படும். |
13- 15 ஆண்டுகள் | வருடந்திர பரிசோதனைகளை சரியாக செய்த பின்னர் பார்வை செவித்திறன் மற்றும் காசநோய் போன்ற பரிசோதனை நடாத்தப்படும் (MCV4, DTaP அல்லது HPV போன்றவை). |
16-18 ஆண்டுகள் | வருடாந்திர பரிசோதனை சரியாக செய்த பின்னர் குழந்தைக்கு 16 வயதில் ஆனவுடன் அவர்களுக்கு MCV4 பூஸ்டர் மற்றும் ஆண் பிள்ளைகளுக்கு B தடுப்பூசிகள் வழங்குவார்கள். ஆண்டுதோறும் (ஆறு மாதங்களில் தொடங்கி): இன்ஃப்ளூயன்ஸா/ஃப்ளூ தடுப்பூசி (உங்கள் பிள்ளை 9 வயதுக்கு குறைவானவராக இருந்தால், அவருக்கு முதல் காய்ச்சல் தடுப்பூசி போட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு ஒரு முறை பூஸ்டர் ஷாட் தேவைப்படுகிறது) |
தடுப்பூசிகளின் விவரங்கள்
- DTaP: Diphtheria, tetanus, acellular pertussis vaccine.
- HAV: Hepatitis A vaccine. HBV: Hepatitis B vaccine.
- Hib: Haemophilus influenzae type B, or flu.
- HPV: Human papillomavirus vaccine.
- IPV: Inactivated polio vaccine.
- MCV4: Meningococcal conjugate serotype A, C, W and Y vaccine for meningitis.
- Men B: Meningococcal Serotype B vaccine for meningitis.
- MMR: Measles/mumps/rubella vaccine.
- PCV: Pneumococcal conjugate vaccine for meningitis.
- Rotavirus: Vaccine against potentially life-threatening diarrhea.
- TB: Tuberculosis screening.
- Varicella: Chickenpox vaccine.
தடுப்பூசிகளின் முக்கியத்துவம்:
1. குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை சரியாக வழங்க வேண்டும். ஏனெனின் இவைகள் உயிர் ஆபத்துக்களை ஏற்படுத்தும் நோய்களிலிருந்து எமது குழந்தைகளை பாதுகாக்கும் வேலைகளை செய்கின்றது.
2. நோயின் தாக்கத்தை தடுப்பதால், மருத்துவ செலவுகளும் குறைவாக இருக்கும். மேற்குறிப்பிட்ட தடுப்பூசிகளை அரசாங்கம் எமது குழந்தைகளுக்கு வழங்குகின்றது. அதனை தவறாமல் பெற்றுக் கொள்வது சிறந்தது.
3. குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. இது குழந்தைகளின் உடல் நலத்தை பாதுகாக்கும்.
4. பல பள்ளி மற்றும் கல்லூரிகள் தடுப்பூசிகளை நிரூபிக்கும் வகைளில் விழிப்புணர்வுகளை வழங்கியுள்ளது. மாணவர்கள் அவர்களின் கல்வி நடவடிக்கைகளில் சிறந்து வழங்க வேண்டும் என்றால் இந்த தடுப்பூசிகளை தவறாமல் பெற்றுக் கொள்ள வேண்டும்.
5. தடுப்பூசிகள், குழந்தைகளை பல்வேறு தொற்று நோய்களிடமிருந்து பாதுகாக்க உதவுகின்றன. உதாரணமாக தடுப்பூசிகளை சரியாக வழங்கியிருந்தால் கொரோனா பாதிப்பும் குழந்தைகளுக்கு குறைவாக இருந்திருக்கும். இவை நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகின்றது.