Eating disorders symptoms: பெண்களை குறி வைக்கும் அரிய நோய்- அறிகுறிகள் எப்படி இருக்கும்?
பொதுவாக தற்போது இருக்கும் தவறான வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவு பழக்கங்கள் காரணமாக புதிய வகையான நோய் தோற்றம் பெற்று வருகின்றது. இதனால் நாளுக்கு நாள் நாம் நோயாளிகளாக மாறி வருகின்றோம்.
அந்த வகையில் இளைஞர் மற்றும் பெண்களை தாக்கும் முக்கிய நோய்களில் ஒன்றாக தான் “Eating disorder” நோய் பார்க்கப்படுகின்றது.
“Eating disorder” என்பது ஒழுங்கற்ற உணவு பழக்கத்தினை சார்ந்த நோயாகும். அதிகப்படியான உணவு அல்லது குறைவான உணவு உட்கொள்ளும் ஒருவர் இந்த நோயால் பாதிக்கப்படலாம். இந்த நோயின் தாக்கம் இருப்பவர்கள் ஆரம்ப காலங்களில் நோயின் தாக்கத்தை கண்டறிவது நல்லது.
முன்கூட்டியே இந்த நோயின் அறிகுறிகளை கண்டறிவது மற்றும் சரியான நேரத்தில் நோயாளிக்கு சிகிச்சை அளிப்பது அவசியம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றன.
அப்படியாயின் “Eating disorder” நோயின் அறிகுறிகள், அதன் சிகிச்சை, நோய் வருவதற்கான காரணங்கள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
உணவுக் கோளாறு நோயின் அறிகுறிகள் என்ன?
1. சிலர் எந்த விதமான காரணமும் இல்லாமல் மிக குறைந்த அளவிலான உணவை உண்ணுவார்கள். இதுவே இந்த நோயின் முதல் அறிகுறியாக பார்க்கப்படுகின்றது. இது பொதுவாக குழந்தைகளுக்கு சரியாக வரும்.
2. சரியான நேரத்திற்கு பசி வராத காரணத்தினால் உடல் மெலிந்து, பார்க்கவே பரிதாபமாக காணப்படும். அத்துடன் உடல் பலவீனமாகவும் காணப்படும். இப்படியான அறிகுறிகள் இருப்பவர்கள் அதிக சத்துக்கள் உள்ளடங்கிய உணவுகளை சாப்பிட வேண்டும்.
3. சில சமயங்களில் எந்தவித காரணமும் இல்லாமல் கவலையாக இருப்பது போன்று உணர்வீர்கள். இதுவும் உணவு கோளாறு நோயின் அறிகுறியாக பார்க்கப்படும்.
4. இந்த வகை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்துடன் ஒன்றாமை தனியாக வாழ ஆசைப்படுவார்கள். இது சில ஏமாற்றங்கள் மூலமும் ஏற்பட்டிருக்கலாம். இதனை ஆரம்ப காலங்களில் கண்டறிந்தால் உரிய சிகிச்சை எடுத்து கொள்வது சிறந்தது.
5. பசியில்லாமல் இருப்பது ஒரு அறிகுறியாக இருந்தாலும் அதிகமாக பசியெடுப்பதும் உணவு கோளாறு நோயின் அறிகுறியாக பார்க்கப்படுகின்றது. நோயாளி அடிக்கடி மிக அளவுக்கு அதிகமான உணவை எடுத்து கொள்வதால் அவர்களுக்கு சில சமயங்களில் ஆபத்து ஏற்படுத்தலாம். 6. ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் நோயாளி பெருமளவில் உணவை உட்கொள்வார். இது அவர்களின் உடலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும்.
7. பசி இல்லாத நேரத்திலும் சிலர் சாப்பிட வேண்டும் என்ற கட்டாயத்தில் சாப்பிடுவார்கள். இது முற்றிலும் பிரச்சினை ஏற்படுத்தும்.
8. நம்மில் சிலர் இருப்பார்கள் மற்றவர்கள் என்ன கூறினாலும் சிரித்து கொண்டே சமாளிப்பார்கள். இது அவர்களின் சுயமரியாதையை குறைவாக மதிப்பிட செய்கிறது. இதனால் பல இடங்களில் அவமானப்படவும் வாய்ப்பு உள்ளது.
9. திடமான ஒரு முடிவு எடுக்க முடியாமல் இருப்பார்கள். அவர்களின் மனநிலை அலைபாய்ந்து கொண்டிருக்கும்.
10. உடல் எடை மற்றும் வடிவத்தில் திடீரென கவனம் செலுத்தும் நபராக இருப்பார்கள். ஆரம்ப காலம் முதல் எந்தவித அக்கறையும் இல்லாமல் திடீரென அவர்களின் உடல்நிலையில் கவனம் செலுத்துவார்கள்.
11. உடல் எடையில் திடீர் மாற்றம் இருக்கும். அதிலும் குறிப்பாக வித்தியாசமான உடல் அமைப்பில் இருப்பார்கள்.
உணவு கோளாறு நோய் வருவதற்கான காரணங்கள்
1. உணவு கோளாறு நோய் சில உளவியல் காரணங்களாக ஏற்படும். சிலர் அதிகமான மன அழுத்தம் காரணமாக தன்னை தானே குறைவாக நினைத்து கொண்டிருப்பார்கள். இதனால் சரியாக சாப்பிட முடியாமல் மெலிந்த தோற்றத்தில் இருப்பார்கள்.
2. ஊட்டச்சத்து குறைபாடுகள், மரபணு ஒப்பனை, ஹார்மோன் விளைதல் ஆகிய காரணங்களால் கூட இந்த நோய் ஏற்படலாம். ஆரம்ப காலங்களில் இந்த நோயை கண்டறிந்தால் உடனடியாக மருத்துவரை நாடுவது சிறந்தது.
3. சிலருக்கு பிற மருத்துவ பிரச்சினைகள் மற்றும் உயிரியல் காரணிகளால் உணவு கோளாறு நோய் ஏற்படலாம். இதனால் மருந்துவில்லைகள் எடுத்து கொள்பவர்கள் உங்களின் உடல்நிலையில் மிகுந்த கவனம் எடுக்க வேண்டும்.
4. கடந்த கால நிகழ்வுகள் போன்ற தனிப்பட்ட பிரச்சினைகளால் உணவு கோளாறு நோய் ஏற்படலாம். நோயாளிகளை முடிந்தவரை தொந்தரவு செய்யாமல் இருப்பது நல்லது.
5. சிலருக்கு மற்றவர்களின் கலாச்சாரம் ஒற்றுப் போகாது. இவர்கள் அந்த கலாச்சாரத்திற்கு பழகும் வரை உணவு கோளாறு நோயால் அவஸ்தை அனுபவிக்கலாம்.
6. சில சமயங்களில் குறிப்பிட்ட சில உணவுகளை உட்க் கொள்வதால் இந்த நோய் ஏற்படலாம். இதனால் சாப்பிடும் பொழுது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
சிகிச்சையளிப்பது எப்படி?
- உணவு கோளாறு நோய் இருப்பவர்கள் அதனை அறிந்து கொண்டால் உடல் ரீதியாக பரிசோதித்து பார்க்கலாம்.
- ஒட்டுமொத்த சுகாதார நிலை மற்றும் குறிப்பாக ஊட்டச்சத்து குறைபாடுகளை பரிசோதித்து பார்க்கலாம்.
- உளவியல் பரிசோதனை செய்து அவர்களிடம் இருந்து சில ஆலோசனைகளை தொடர்ந்து எடுத்து கொள்வது சிறந்தது.
- தியானம், யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபடுவதால் மனது ஒருநிலைப்படும். இதனால் உங்களின் ஆரோக்கியத்திலும் சில மாற்றங்கள் ஏற்படலாம்.
- அறிவாற்றல் நடத்தை சிகிச்சை மற்றும் உங்கள் மனநிலை மாற்றங்கள், உணவு பழக்க வழக்கங்களை கவனித்தல் போன்ற சிகிச்சைகளை தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும்.
- அளவுக்கு அதிகமாக உணவு உட்கொள்ளும் மனநிலை உங்களுக்கு இருந்தால் அதனை எப்படி சரிச் செய்வது என ஆலோசனை எடுத்து கொள்ள வேண்டும்.
- மனஅழுத்தம் நீக்கி மருந்துகள் மற்றும் ஆன்டி - அன்சிட்டி மருந்துகள் தேவையற்ற நேரங்களில் எடுத்து கொண்டால் உணவு கோளாறு நோயை கட்டுக்குள் வைக்கலாம்.
- எந்த குறைபாடுகளையும் சமாளிக்க ஊட்டச்சத்துக்கள் பரிந்துரைக்கப்படலாம்.
- பெரும்பாலான நோய்களை உணவுகள் மூலம் கட்டுக்குள் வைக்கலாம். எனவே போதியளவு ஊட்டச்சத்துக்களை எடுத்து கொள்வது சிறந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |