இந்தியாவில் அறிமுகமாகும் MPV வாகனம்- முழு விவரம் இதோ!
ஒரு சிலர் ஒருக்கட்டத்திற்கு பின்னர் புதிய கார்கள் வாங்குவதற்கு திட்டம் போடுவார்கள். அப்படியானவர்களுக்கு என்னென்ன கார்கள் புதிதாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என்ற விவரங்கள் தேவைப்படும்.
அந்த வகையில், இந்திய சந்தையில் MPV பிரிவுக்கான தேவையைக் கருதி, முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள் 2025 ஆம் ஆண்டுக்கான புதிய கார்களை அறிமுகம் செய்யவுள்ளன.
மாருதி சுசுகி எர்டிகா, டொயோட்டா இன்னோவா போன்ற MPVகள் தற்போது பிரபலமாக உள்ளது. வரவிருக்கும் மாடலில் பிரபல MPVயின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பும் அடங்கும்.
அப்படியாயின், புது வருடத்தில் வரவிருக்கும் MPVகளில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கலாம் என்பதனை தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.
MG M9
2+2+3 இருக்கை அமைப்பு கொண்ட மின்சார ஆடம்பர MPV ஆகும். இதில் MG M9. மின்சார ஸ்லைடிங் கதவுகள், பவர் டெயில்கேட், பெரிய பனோரமிக் சன்ரூஃப், மசாஜ், மெமரி, வென்டிலேஷன், ஹீட்டிங் செயல்பாடுகளுடன் கூடிய முன் மற்றும் இரண்டாம் வரிசை இருக்கைகள், லெவல் 2 ADAS செயல்பாடுகள் ஆகியன உள்ளடங்களாக கார் வடிவமைக்கப்படவுள்ளது.
ஒற்றை சார்ஜில் 435 கிமீ வரை பயணிக்கக்கூடிய 90 kWh பேட்டரி பேக் இந்த EVயில் பொருத்தப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.