நயன்தாரா விவகாரத்தை முன்பே கணித்த பயில்வான் ரங்கநாதன்! மீண்டும் சூடுப்பிடிக்கும் குழந்தை சர்ச்சை
நயன்தாரா குழந்தை விவகாரத்தை அப்போதே விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் கணித்து விட்டதாக கூறி தகவல் உலாவி வருகின்றது.
திருமணம் முடிந்த 4 மாதங்களில் தாங்கள் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர்களாக மாறி உள்ளதாக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா புகைப்படத்துடன் தெரிவித்து இருந்தனர்.
இவர்களுக்கு ஒருபுறம் வாழ்த்துக்கள் குவிந்தாலும் மறுபுறம் பல விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்து வருகிறது.
முன்பே கணித்த பயில்வான் ரங்கநாதன்
நடிகைகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் பயில்வான் ரங்கநாதன், நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் குறித்து பேசி இருந்த வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது.
அந்த வீடியோவில் விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணம் செய்து கொண்டாலும் நயன்தாரா குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டார்.
ஏனெனில் அவர் கைவசம் அதிக படங்கள் உள்ளன. சம்பாதிக்கும் ஆசையில் அவர் கண்டிப்பாக குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டார் என பயில்வான் கூறியிருந்தார்.
இந்த வீடியோ தான் தற்போது வைரலாகி, ஏற்கனவே கணித்த பயில்வான் ரங்கநாதன் என்ற பெயரில் ட்ரெண்டாகி வருகிறது.