அசோக் செல்வன் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு இவர்தான் காரணமாம்! புகைப்படத்துடன் லீக்கான விமர்சனம்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் நடிகர் அசோக் செல்வன் அவருடைய திருமணம் குறித்து வெளியான தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சினிமாவில் எனக்கான இடம் கிடைக்கவில்லை
தமிழ் சினிமாவில், அஜித் நடிப்பில் ஹீட்டான “பில்லா 2” என்ற படத்தில் அஜித்தின் சிறு வயது கதாபாத்திரத்தை நடித்து அறிமுகமானாவர் தான் நடிகர் அசோக் செல்வன்.
இதனை தொடர்ந்து முக்கிய கதாபாத்திரங்களிலும், ஹீரோவாகவும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் தமிழ் சினிமாவில் இவருக்கு என ஒரு தனி இடம் கிடைக்கவில்லை.
இதனால் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார் அசோக்.
இவர் குறித்து பல விமர்சனங்கள் எழுந்த போதிலும் பெரியதாக அவர் எதையும் கண்டு கொள்ளவில்லை.
திருமணம் யாருடன் தெரியுமா?
இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியில் பங்கு பற்றி தனக்கென ஒரு இடத்தை பிடித்த அமெரிக்கப்பாடகி பிரகதி குருப்ரசாத்தை அசோக் காதலித்து வருவதாக தகவல் வெளியாகியது.
ஆனாலும் இவர் இது குறித்து கேட்டும் பதிலளிக்காமல் இருந்த நிலையில், தற்போது இவர்கள் நல்ல நண்பர்கள் தான் என பதிலளித்தார்கள்.
இதனை தொடர்ந்து தற்போது பிரபல தயாரிப்பாளரின் மகளை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல்கள் தெரிவித்துள்ளது.
இதில் பெயர் மற்றும் விபரங்கள் இது வரையில் உத்தியோக பூர்வமாக வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.