விஜய்யின் ஹேர்ஸ்டைலை கேலி செய்த ரசிகர்கள்! வைரல் புகைப்படம்
நடிகர் விஜய்யின் தற்போதைய ஹேர்ஸ்டைல் நெட்டிசன்கள் மத்தியில் ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றது.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் படத்தில் நடித்து வருகின்றார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் லியோ. மாஸ்டர் படத்துக்கு பின் இருவரும் இணைந்துள்ள படம் என்பதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றுவரும் நிலையில், இரண்டு மாதம் அங்கு படப்பிடிப்பு இருப்பதாக கூறப்படுகின்றது.
இப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிக்கும் நிலையில், இவர் சமீபத்தில் படப்பிடிப்புக்கு சென்ற புகைப்படம் வைரலாகி வருகின்றது. மேலும் விஜய்யுடன் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றது.
காரணம் விஜய்யின் ஹேர்ஸ்டைல், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தாடி என்பதையே... இந்நிலையில் சமீபத்தில் லோகேஷ் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
நடிகர் விஜய்யுடன் லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த கேண்டிட் புகைப்படத்தை பதிவிட்டு, அனைத்திற்கும் நன்றி அண்ணா என பதிவிட்டு இருந்தார். இதில் விஜய் வெள்ளை நிற உடையில் மாஸாக காணப்பட்டார்.
அதாவது சஞ்சய் தத் உடன் விஜய் எடுத்த புகைப்படம் ட்ரோல் செய்யப்பட்டதற்கு பதிலடியாக லோகேஷ் இந்த புகைப்படத்தினையும் கேப்ஷனையும் கொடுத்துள்ளார் என்று கூறப்படுகின்றது.