ரகசிய உறவை காரணம் காட்டி திருமணத்தை நிறுத்திய வருண்: மீண்டும் வைரலாகும் புகைப்படங்கள்
பல காரணங்களை சொல்லி நின்றுப் போன த்ரிஷா நிச்சயதார்த்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.
நடிகை த்ரிஷா
தமிழ் திரையுலகில் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா.
இவர் சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாகியுள்ளார்.
இந்நிலையில், அண்மையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென மீண்டும் ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.
நின்றுபோன திருமணம்
இந்நிலையில், த்ரிஷாவுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொழிலதிபர் வருண் மணியன் என்பவரை திருமணம் செய்யவிருந்தது ஆனால் இருவரும் திடீரென திருமணம் வேண்டாம் என முடிவெடுத்தனர்.
திருமணம் நின்றுப் போனதற்கு காரணம் கூட தனுஷ் உடன் தொடர்பில் இருந்ததால் தான் நின்றுப் போனது என பல தகவல்கள் வெளியாகியிருந்தது.
மேலும், த்ரிஷாவுடன் நிச்சயம் வரை செய்துக் கொண்ட வருண் தற்போது பிந்து மாதவியுடன் டேட்டிங் செய்து வருவதாக பல செய்திகள் புகைப்படத்துடன் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நின்றுபோன த்ரிஷாவின் நிச்சயதார்த்தப் புகைப்படங்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது.