பொன்னியின் செல்வன் வாத்தியதேவனை சந்திக்க வந்த ஜப்பான் ரசிகர்
பொன்னியின் செல்வனின் வந்தியத்தேவனாக நடித்து அனைவரையும் கவர்ந்த நடிகர் கார்த்தியை சந்திக்க ஜப்பானில் இருந்து ரசிகர்கள் வந்துள்ளது ட்ரெண்டாகி வருகின்றது.
பொன்னியின் செல்வன்
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களும் அமோக வரவேற்பினை பெற்றுள்ளது. இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களின் வரவேற்பினை பெற்றது.
இந்நிலையில் கடந்த வாரம் இப்படத்தின் இரண்டாவது சீசன் வெளியாகி ரசிகர்களை கொள்ளையடித்துள்ளது. அனைத்து நடிகர்களின் நடிப்பு மிகச்சிறப்பாக இருந்த நிலையில், வாத்தியத்தேவனாக நடித்த கார்த்திக்கு ரசிகர்கள் அதிகம் என்று தான் கூற வேண்டும்.
முதல் பாகத்தில் அதிகமாக வந்த கார்த்தி, இரண்டாம் பாகத்தில் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே த்ரிஷாவுடன் வருகின்றார். இந்நிலையில் வாத்தியத் தேவனை சந்திக்க ஜப்பானில் இருந்து ரசிகர்கள் வந்துள்ளனர்.
ஜப்பான் ரசிகர்கள்
நடிகர் கார்த்தியை சந்திப்பதற்கு ஜப்பானில் இருந்த சில ரசிகர்கள், சென்னை வந்துள்ள நிலையில், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தினை 4 முறை பார்த்துவிட்டு கார்த்தியை சந்தித்துள்ளனர்.
தன்னைப் பார்க்க ஜப்பானில் இருந்து கிளம்பி வந்த ரசிகர்களுடன் கலந்துரையாடிய கார்த்தி அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டதுடன், குறித்த ரசிகர்கள் கார்த்திகாக ஜப்பானில் இருந்து கொண்டு வந்த பரிசு பொருட்களையும் கொடுத்துள்ளனர்.
ஜப்பான் ரசிகர்களுடன் கார்த்தி எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.