பிரபல நடிகருடன் ரகசிய உறவு: திருமணம் வேண்டாம் என முடிவெடுத்த மாப்பிள்ளை!
நடிகை திரிஷாவின் திருமணம் நின்றுப்போனதற்கு நடிகர் தனுஷுடன் ரகசிய உறவில் இருப்பதன் காரணம் தான் என தெரிவிக்கப்படுகின்றது.
நடிகை திரிஷா
தமிழ் திரையுலகில் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா.
இவர் சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாகியுள்ளார்.
இந்நிலையில், அண்மையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென மீண்டும் ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து நடிகை திரிஷா கர்ஜனை, ராங்கி மற்றும் சதுரங்க வேட்டை 2 போன்ற திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார்.
திருமணம்
சினிமாவில் முதலிடத்தில் இருந்தாலும் தனது வாழ்க்கையில் பல காதல் தோல்விகளைக் கண்டதால் இனிமேல் யாரையும் காதலிக்க மாட்டேன் என்று தனது தாயிடம் சத்தியம் செய்து விட்டு மீண்டும் சினிமாக் களத்தில் இறங்கி விட்டார்.
இந்நிலையில், திரிஷாவுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொழிலதிபர் வருண் மணியன் என்பவரை திருமணம் செய்யவிருந்தது ஆனால் இருவரும் திடீரென திருமணம் வேண்டாம் என முடிவெடுத்தனர்.
சர்ச்சை
அந்த நேரத்தில் இவர்கள் திருமணம் நின்றது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அப்போது நடிகர் தனுஷுக்கும், நடிகை திரிஷாவிற்கு ஏற்பட்ட நெருக்கமான உறவு தான் திரிஷா - வருண் திருமணம் நின்றுபோன காரணம் என்று தகவல் வெளிவந்தது.
ஆனால், இந்த விடயத்தை முற்று முழுவதுமாக மறுத்திருந்தார் திரிஷா, இந்த விடயத்தை திரிஷா திருமணம் செய்யவிருந்த வருண் இதனை நம்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் தான் இவர்களுடைய திருமணம் நின்றுப்போனதாக தற்போது தகவல்கள் வெளியாகி மிகவும் வைரலாகி வருகின்றது.