உங்க பக்கெட் லிஸ்ட் லண்டன் டூர் இருக்கா? அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க
சமீபக் காலமாக லண்டனுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.
லண்டன் உலக சுற்றுலா நகரங்களில் ஒன்றாகவும், மிகச்சிறந்த பிசினஸ் டெஸ்டினேஷனாகவும் பார்க்கப்படுகிறது. ஆண்டுக்கு சுமாராக லட்சக்கணக்கான மக்கள் லண்டனுக்கு சுற்றுலா வருகிறார்கள்.
வாழும் நாட்களில் ஒரு தடவையாவது லண்டன் போய் வர வேண்டும் என்ற கனவுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தி உங்களுக்கு சோகத்தை ஏற்படுத்தினாலும், லண்டன் அரசாங்கத்திற்கு சாதகமான மாற்றம்.
அந்த வகையில், லண்டனை சுற்றிப் பார்க்க வரும் பயணிகள் வரி செலுத்த வேண்டும் என்ற புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பில் பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
சுற்றுலா வரி அறவீடு

இந்தியா, இலங்கை போன்ற நாடுகளை பிறப்பிடமாக கொண்ட பலர் லண்டனில் செட்டிலாகி விட்டனர். ஆனாலும் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.
இப்படி இருக்கும் பட்சத்தில் லண்டனை சுற்றிப் பார்ப்பதற்காக வரும் சுற்றுலா பயணிகளிடம் சுற்றுலா வரி அறவிடப்போவதாக லண்டன் மேயர் கூறியுள்ளார். இங்கு உள்ள ஹோட்டல் மற்றும் ஏர் பிஎன்பிகளில் தங்கினால் அதற்கு சுற்றுலா வரி செலுத்த வேண்டும் எனக் கூறப்படுகிறது.
அந்த வகையில், ஒரு பயணிக்கு ஒரு நாள் இரவுக்கு பத்து பவுண்டுகள் செலுத்த வேண்டும். இப்படி வரி அறவிடும் பொழுது, ஆண்டுக்கு 240 மில்லியன் பவுண்டுகள் வருமானம் கிடைக்கும் என்று லண்டன் மேயர் சாதிக் கான் கூறுகிறார். இப்படி அறிவிடப்படும் பணத்தை கொண்டு லண்டன் நகரத்தை அபிவிருத்தி செய்யப்போவதாகவும் கூறியுள்ளார்.

இது போன்று நியூயார்க் நகரம் ,டோக்கியோ ,பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட சர்வதேச சுற்றுலா நகரங்கள் சுற்றுலா வரியை அறவிட ஆரம்பித்து விட்டது.
உதாரணமாக, ஜப்பான் தலைநகரமான டோக்கியோ, 35 மில்லியன் பவுண்டுகளை சுற்றுலா வரியாக பெறுகிறது. அதே போன்று இதன் மூலம் நியூயார்க் நகரம் ஒரு ஆண்டுக்கு 493 மில்லியன் பவுண்டுகளை சுற்றுலா வரியாக பெறுகிறது
வரிக்கட்டணம்
ஸ்காட்லாந்து, எடின்பர்க் ஆகிய நகரங்களில் சுற்றுலா பயணிகளிடம் இருந்து வரி அறவிடும் பழக்கம் ஆரம்பமாகி விட்டது. இங்கு வருபவர்கள் இரவு ஹோட்டல் அல்லது ஏர் பிஎன்பிகளில் தங்குகிறார்கள் என்றால் அந்த கட்டணத்தில் ஒரு கணிசமான தொகையை சதவீதமாக செலுத்த வேண்டும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |