சிவகார்திகேயனுக்கு வெற்றி - உலக சாதனையில் தாய்கிழவி வசூல்... 10 நாளில் எவ்வளவு?
சிவகார்த்திகேயன் தயாரித்து ராதிகா சரத்குமார் நடித்துள்ள தாய்கிழவி திரைப்படம் தற்போது உலகளவில் சாதனை செய்துள்ளது.

தாய்கிழவி
தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள தாய்கிழவி திரைப்படம் கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி வெளியானது.
தாய்கிழவி திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பை தூண்டி உள்ளது. இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்று, நல்ல வசூலை அள்ளி வருகிறது. படம் பார்த்த பலரும் ராதிகாவின் நடிப்பை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இந்த படத்தில் ராதிகாவின் லுக்கிற்கே தனி ரசிகர்கள் உருவாகி விட்டனர். திரையரங்குகளில் கூட்டத்திற்கு மட்டும் பஞ்சம் இல்லை.
இந்த நிலையில் தாய்கிழவி திரைப்படம் உலகளவில் 10 நாட்களில் ரூ 50 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது.

இதுவரை சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கனா , டாக்டர் , டான் ஆகிய படங்கள் வசூலில் சாதனை படைத்ததை தொடர்ந்து தற்போது அந்த லிஸ்டில் தாய்கிழவி படமும் சேர்ந்துள்ளது.
இப்படி இருக்க சிவகார்திகேயன் நடிக்கும் அடுத்த படமான சேயோன் படத்தையும் தாய்கிழவி பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் தான் இயக்கப்போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
#ThaaiKizhavi crosses ₹50 Crores+ Worldwide GBOC in just 10 days! 💥
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) March 9, 2026
Overwhelmed by the incredible love and support from everywhere. Thank you for making it a #MegaBlockbusterThaaiKizhavi ❤️#MorattuVasool@Siva_Kartikeyan @Sudhans2017 @KalaiArasu_ @SKProdOffl… pic.twitter.com/4aKJASW3hg
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |