ஸ்மிருதி மந்தனா திருமணம் திடீரென ஏன் நிறுத்தப்பட்டது? வெளியான உண்மை காரணம்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மற்றும் பலாஷ் முச்சல் திருமணம் திடீரென நின்று போனதற்கு உண்மை காரணம் தற்போது வெளியாகி வருகின்றது.
ஸ்மிருதி மந்தனா திருமணம்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஸ்டார் பேட்டராக விளங்கும் ஸ்மிருதி மந்தனா, இந்திய மகளிர் அணியின் முக்கிய வீராங்கனை மட்டுமன்றி, அணியின் துணை கேப்டனாகவும் இருக்கிறார்.
சமீபத்திய உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்த நிலையில் ஸ்மிருதி பிரபல இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
சமீப காலமாக இரவரும் வெளிப்படையாக தங்கள் காதலை வெளிக்காட்டி வந்தனர். இதனை தொடர்ந்து இவர்களின் திருமணம் மகாராஷ்டிராவின் சாங்லி பகுதியில் உள்ள ஸ்மிருதியின் பண்ணை வீட்டில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், திருமணத்துக்கு முந்தைய இரவு ஸ்மிருதியின் தந்தை சீனிவாஸ் மந்தனாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதால் திருமணம் திடீரென நிறுத்தபட்டது.
பின்னர் பலாஷ் முச்சலும் வைரஸ் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் அது பொய்யான தகவல் என தெரியவந்தது.
பலாஷின் சகோதரி வெளியிட்ட பதிவு இதில் உண்மை இல்லை எனத் தெளிவுபடுத்தியது. அவர், “திருமணம் நிறுத்தப்பட்டதற்கு ஸ்மிருதியின் தந்தையின் உடல்நிலையே காரணம். அவர்களின் தனியுரிமையை மதியுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.

சர்ச்சை
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ‘மேரி டி’கோஸ்டா’ என்ற பெண் ஒருவர் பலாஷ் முச்சலுடன் பேசிய ஸ்க்ரீன்ஷாட்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அதில் மும்பையின் வெர்சோவா கடற்கரையில் அதிகாலை 5 மணிக்கு தன்னைச் சந்திக்க பலாஷ் அழைத்தது, ஸ்மிருதியைப் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் தவிர்த்தது போன்ற தகவல்கள் அதில் இருந்தன.
மேலும் ஸ்க்ரீன்ஷாட்களின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படவில்லை என்றாலும், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால், “ஸ்மிருதியை பலாஷ் ஏமாற்றிவிட்டார்.

எனவும் தகவல் தீ போல பரவி வரகின்றது. ஸ்மிருதி திருமணத்தைப் பற்றிய தனது இன்ஸ்டா பதிவுகளை ஸ்மிருதி மந்தனா திடீரென நீக்கிவிட்டார்.
அதோடு, திருமண அறிவிப்பு வீடியோவை பகிர்ந்திருந்த சக வீராங்கனைகள் ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷ்ரேயங்கா பவார் ஆகியோரும் தங்களது பதிவுகளை அகற்றியுள்ளனர்.
இதனால் திருமணம் நடைபெறாமல் இருப்பதற்கு காரணம் மருத்துவ காரணமா அல்லது வேறெதாவது காரணமா என ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |