viral video! ஒரே ஒரு துளி வியர்வை: பாத்ரூம் போக முடியாமல் குழந்தையுடன் தவிக்கும் தந்தை!
இணையத்தில் எத்தனையோ வீடியோக்கள் பதிவேற்றப்பட்டாலும் ஒரு சில வீடியோக்கள் உங்களை சிரிக்க வைக்கும், ஒரு சில வீடியோக்கள் உங்களை அழவைக்கும் மேலும் சில வீடியோக்கள் புத்துணர்ச்சியையும் விழிப்புணர்வுகளையும் கொடுக்கும்.
அதிலும் பல சுவாரஸ்யமான வீடியோக்களும் அவ்வப்போது உலாவிக் கொண்டிருக்கின்றது.
அதில் எமது கண்ணில் பட்ட வீடியோ ஒன்று தான் இந்த வீடியோ,
ஒரு துளி வியர்வையால் கலைத்த உறக்கம்
இந்த வீடியோவில் தந்தை ஒருவர் தனது குழந்தையை பாடல் பாடி உறங்கவைக்கிறார். அந்தக் குழந்தையும் அமைதியாக உறங்க அவர் மெதுவாக மெத்தையில் குழந்தையை படுக்கவைக்கிறார்.
பிறகு அவர் மெது மெதுவாக லோக்கரைத் திறந்து ட்ஸ்யூ பேப்பரை எடுத்துக் கொண்டு காலணியையும் எடுத்துக் கொண்டு எவ்வளவு மெதுவாக கதவைத் திறக்க முடியுமோ அவ்வளவு மெதுவாக கதவைத் திறந்து வெளியே செல்கிறார்.
வெளியில் சென்று அவர் போன இடம் பாத்ரூம் தான். அங்கு போவதற்கு அத்தனை பாடு பட்டிருக்கிறார். மெதுவாக சென்று பாத்ரூம் கொமட்டை திறக்கும் போது அவரின் முகத்தில் இருந்து விழுந்த ஒரே ஒரு வியர்வை துளியில் எழுந்தது அவரின் குழந்தை.
உடனே போய் குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு போகவேண்டிய வேலையை முடிக்க முடியவில்லையே என்ற கவலையில் மீண்டும் குழந்தையை தாலாட்டுகிறார்.
Awwwww poor dad! ?pic.twitter.com/lOoisKsM2e
— The Figen (@TheFigen_) April 5, 2023
இந்த வீடியோ இணையத்தில் அதிக பார்வையாளர்களைப் பெற்று இருக்கிறது. இதனைப் பார்த்து அனைவரும் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார்கள்.