கைத்துடைப்பதற்கு டிஷ்யூ பேப்பர்களுக்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகள்: பணம் இருந்தால் என்னவேணுனாலும் பண்ணலாம்.!
உலக பணக்காரப்பட்டியலில் இடம்பிடித்த முகேஷ் அம்பானியின் மனைவி நிதா அம்பானியின் கனவாக இருந்த கலாச்சார மையத்தின் திறப்பு விழாவில் டிஷ்யூ பேப்பர்களுக்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகள் பயன்படுத்தப்பட்ட தகவல் தற்போது வைரலாகி வருகின்றது.
திறப்பு விழா
நிதா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தின் திறப்பு விழா நேற்று மும்பை ஜியோ வேர்ல்ட் சென்டரில் நடைபெற்றுள்ளது.
பல வருடங்களாக ஒரு கலாச்சார மையத்தை துவங்க வேண்டும் என நினைத்து கொண்டிருந்த இவர், தற்போது இந்த பிரமாண்ட கலாச்சார மையத்தை துவங்கியுள்ளார்.
இந்த சிறப்பு நாளில், பல ஒழுங்குமுறை கலாச்சார வெளி பார்வையாளர்களுக்கு இசை, நாடகம், நுண்கலைகள் என பலவிடயங்களை உள்ளடக்கியதாக இந்த கலாச்சார நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவிற்கு ஏராளமான திரைப்பிரபலங்களும் வியாபாரிகளும் கலந்துக் கொண்டிருந்தனர்.
கைத்துடைப்பதற்கு 500 ரூபாய் நோட்டுகள்
நிதா அம்பானி தனது கலாச்சார மையமான என்எம்ஏசிசி திறப்பு விழாவின் மூலம் தலைப்புச் செய்திகளில் முதலிடம் பிடித்தார்.
இவை அனைத்திற்கும் மத்தியில் ஒரு வைரல் ட்வீட் வந்தது, அங்கு பயனர் சில இனிப்புகளின் படத்தை வெளியிட்டுள்ளனர்.
அதில் தட்டு அலங்காரம் செய்யப்பட்ட 500 ரூபாய் நோட்டுகள் டிஷ்யூ பேப்பர்கள் போல. அதில், “அம்பானி ஜி கி பார்ட்டி மே 500 கே நோட்ஸ் டிஷ்யூ கி தாரா யூஸ் ஹோதே ஹை” என்று தலைப்பிடப்பட்டிருந்தது.
Ambani ji ke party mein tissue paper ki jagah 500 ke notes hote hain ? pic.twitter.com/3Zw7sKYOvC
— R A T N I S H (@LoyalSachinFan) April 2, 2023
இதில், தட்டை அழகாக காட்ட அதை சுற்றி போலியான 500 ரூபாய் காகிதங்கள் வைத்து அலங்கரிக்கப்பட்டுள்ளது.