ரசிகரின் குழந்தையை அடித்த பிரபல நடிகர்! சர்ச்சையை கிளப்பிய காட்சி
தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை ஓங்கி அடித்து எழுப்பிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் பாலகிருஷ்ணா
என்டி ராமாராவின் மகன் பாலகிருஷ்ணா தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக உள்ளார். அவரின் நடன அசைவுகளை மீம் போட்டு பலர் கிண்டல் செய்வது வழக்கம்.
கோபத்தில் அவரது கைகளில் நரம்பு வித்தியாசமாக கிராப்பிக் செய்யப்படுவதையும் ரசிகர்கள் டிரோல் செய்யாமல் விடுவதில்லை. அந்த வகையில் நடிகர் பாலகிருஷ்ணா சர்ச்சைகளில் சிக்குவதையும் வாடிக்கையாக கொண்டவர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு படப்பிடிப்பின் போது தனது காலணியில் அவிழ்ந்து கிடந்த லேசை கட்டாமல் பேசிக் கொண்டிருந்ததாக தனது உதவியாளரை அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
அன்று முதல் அவர் மீது தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்திவிட்டது. அவர் நடிகர், நடிகைகளை கிண்டல் செய்வது, அவமரியாதையாக நடந்து கொள்வது என பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.
குழந்தையை அடித்த சம்பவம்
இவ்வாறு பல சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், தற்போது குழந்தை ஒன்றினை அடித்துள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அண்மையில் ரசிகர் ராமு என்பவரின் வீட்டு கிரகபிரவேசத்திற்கு பாலகிருஷ்ணா அழைக்கப்பட்டார். அந்த விழா முடிந்தவுடன் அவருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அப்போது ஒரு ரசிகர் தனது குழந்தையை தோளில் போட்ட படியே வந்து புகைப்படம் எடுக்க விரும்பினார். அப்போது குழந்தை தூங்கி கொண்டிருந்ததை கண்ட அவர், அந்த குழந்தையின் முதுகில் ஓங்கி அடித்து எழுப்பினார்.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. மீண்டும் பாலகிருஷ்ணா விமர்சனத்துக்குள்ளாகப்பட்டுள்ளார்.
#Balakrishna
— Cine Chit Chat (@CineChitChat) June 2, 2022
Balayya Majaka???#NBK, he is a brand ❤️ pic.twitter.com/ZgkYLEoVuw