அக்குள் வியர்வை நாற்றத்தால் அவதிப்படுகிறீர்களா? சரிசெய்ய இயற்கை வழிமுறைகள் இதோ!
பலருக்கும் அதிகப்படியாக உடலில் வியர்ப்பதினால் அக்குள் பகுதியில் துர்நாற்றம் வர ஆரம்பிக்கும். இது பொது இடத்தில் பழகும் போது, உங்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும். அக்குள் துர்நாற்றத்தைப் போக்க பலர் வாசனை திரவியத்தை பயன்படுத்துகின்றனர்.
இதனால் தோல் வெடிப்பு மற்றும் தோல் கருமையாக மாறும் அபாயம் ஆகிய பாதிப்புகள் உள்ளது. எனவே இயற்கையாகவே அக்குள் பகுதியில் நாள் முழுவதும் துர்நாற்றம் வீசாமல் இருக்கும் என்ன செய்யவேண்டும் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.
அக்குள் துர்நாற்றத்தை போக்க ஒரு துளி தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டருடன் ஒரு சிட்டிகை பேக்கிங் சோடாவை கலந்து பேஸ்ட்டை தயாரிக்கவும். குளித்த பிறகு இந்த பேஸ்டை தடவவும்.
இதனால், துர்நாற்றம் பறந்துபோகும். அடுத்ததாக, 1/4 பங்கு மரவள்ளிகிழங்கு மாவு, 1/4 பங்கு சமையல் சோடா, 1/3 பங்கு தேங்காய் எண்ணெய், 3-4 துளிகள் கசகசா அல்லது சந்தன நல்லெண்ணெய் ஆகியவற்றைக் கலந்து, காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து, தேவைக்கேற்ப குளித்த பின் அக்குள்களில் தடவவும்.
அடுத்து 1/4 பங்கு சமையல் சோடா, 1/4 பங்கு அரோரூட் மாவு, 1/3 பங்கு தேங்காய் எண்ணெய், மற்றும் 4-5 துளிகள் வேப்ப எண்ணெய் ஆகியவற்றைக் கலந்து அக்குளில் தடவவும்.
இந்தக் கலவையை ஒரு டப்பாவில் சேமித்து, தேவைப்படும் போது, அக்குள்களின் துர்நாற்றத்தை அகற்ற, அதைப் பயன்படுத்துங்கள்.
கடைசியாக 1/4 பங்கு பேக்கிங் சோடா, 1/4 பங்கு சோள மாவு, 1/3 பங்கு பாதாம் எண்ணெய் மற்றும் 4-5 துளிகள் ஏதேனும் எசன்ஷியல் ஆயில் ஆகியவற்றை கலந்து டப்பாவில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.
அக்குள் வியர்வை நாற்றத்தை நீக்க, தேவைக்கேற்ப அல்லது வெளியே செல்லும் முன் அக்குள்களில் தடவவும்.