உயிருக்கு போராடும் முல்லை.. அண்ணன் தம்பி பாசத்தால் நனையும் பாண்டியன் ஸ்டோரஸ் ரசிகர்கள்!
உயிருக்கும் போராடும் முல்லையை காப்பாற்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சகோதரர்கள் நால்வரும் ஒன்றிணைந்துள்ளார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக செல்லும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியல் மற்ற சீரியல்களை போல் அல்லாமல் சற்று வித்தியாசமாக இருக்கின்றது.
வீட்டில் வந்த சண்டையால் நான்கு அண்ணன் - தம்பிகளும் தற்போது தனித்தனியாக இருந்து வந்தார்கள்.
கண்ணன் - ஐசு அதிகமான பணம் வாங்கியதால் ஏற்பட்ட பிரச்சினையில் கதிர் சிறையில் இருந்தார்.
பின்னர் அவரை மூர்த்தி சுமார் 5 இலட்சம் கொடுத்து பிணையில் வெளியில் எடுத்தார்.
உயிருக்கு போராடும் முல்லை
இந்த நிலையில் தற்போது முல்லை விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார்.
இதனை தொடர்ந்து முல்லையின் நிலையை தெரிந்து கொள்ள அணைவரும் மருத்துவமனையில் இருக்கிறார்கள்.
அந்தவகையில் முல்லைக்கு அவசரமாக இரத்தம் தேவைப்படுவதால் சகோதரர்கள் மூவரும் ஒன்றிணைந்து இரத்தம் தானம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
பிரச்சினை என்று வரும் போது ஒன்று கூடுவது தான் சொந்தம் என்பதனை இந்த சீரியல் மக்களுக்கு தெளிவாக எடுத்து கூறி வருகின்றது.