மூர்த்தியின் முகத்திரையை உடைத்தெறியும் ஜீவா: சுக்குநூறாக உடையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!
மூர்த்தியை எதிர்த்து கேள்வி கேட்டு, ஜீவா பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டை ஆரவாரப்படுத்தியுள்ளார்.
பாண்டியன் ஸ்டோரில் புதிய திருப்பம்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக நகரும் சீரியல்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்கள் அனைவரும் தன்னுடைய கதாபாத்திரத்தில் இறங்கி நடிப்பதால் மக்கள் மத்தியில் நல்ல ரீச் கிடைத்து வருகிறது.
ஆரம்பத்தில் கதிர் - முல்லை ரொமன்ஸ்க்காக மாத்திரமே இந்த சீரியலை பார்த்து வந்த ரசிகர்கள் சித்ராவின் மரணத்திற்கு பின்னர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த அனைவரும் தன்னுடைய முழு பங்களிப்பையும் கொடுத்து நடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
இதனை தொடர்ந்து தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் இருக்கும் ஐசு, முல்லை, தனம் என மூன்று நாயகிகளும் கர்ப்பமாக இருக்கிறார்கள்.
இவர்களை மீனா தான் பக்கத்திலிருந்து கவனித்துக் கொள்கிறார். அப்போது சம்பளத்தை அனைவரும் மூத்த அண்ணனிடம் கொடுக்கும் போது ஜீவா மட்டும் கொடுக்க ஒன்றும் இல்லாமல் தனிக்குனிந்த படி நிற்கிறார்.
இந்த நிலையில் சம்பள விடயத்திலிருந்து ஜீவா சற்று மனம் தளர்வாக தான் இருக்கிறார்கள்.
பணமில்லாமல் காத்திருந்த ஜீவா
மீனாவும், குழந்தையும் நடுரோட்டில் நின்றுக் கொண்டு ஜீவாவை அழைத்த போது ஜீவாவிடம் பணமில்லை. இதனால் ஒரு ஆட்டோவை கூட அனுப்ப முடியவில்லை.
இதனால் மனமுடைந்த ஜீவா கடையை அரைவாசியாக மூடி விட்டு வெளியில் சென்றுவிட்டார்.
இப்படியான ஒரு நிலையில் வீட்டில் கோபமாக அமர்ந்திருக்கும் ஜீவாவிடம் மூர்த்தி, கடை மூடி இருப்பது குறித்து கேள்வி எழுப்பும் போது ஜீவா கடுமையாக திட்டியுள்ளார்.
மூர்த்தி கேட்கும் கேள்விகளுக்கு ஜீவா பதில் கூறிக் கொண்டே,“ஏன் அண்ணே கல்லாப்பெட்டியை மூடி வைச்சிங்க, நா பணத்தை எடுத்துட்டு ஓடி போய்றுவேணா?” எனக் கேட்டுள்ளார்.
வீட்டில் நடக்கும் டுவிஸ்ட்களை பார்க்கும் போது குடும்பம் இரண்டாக பிரிந்து விடுவோமோ என ரசிகர்கள் முனுமுனுத்து வருகிறார்கள்.