தனத்தின் வேண்டுதல் நிறைவேறி விட்டதா?முல்லையின் வளைகாப்பில் நடந்த டுவிஸ்ட்!
மீண்டும் ஜீவாவும் கண்ணனும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் இணைவது போன்ற காட்சி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பரபரப்பான தருணங்கள்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியலில் மூர்த்தி, கதிர்,ஜீவா, கண்ணன் என நான்கு கதாநாயகர்களும், தனம்,முல்லை, மீனா, ஐஸ்வர்யா என நான்கு கதாநாயகிகளையும் கொண்டு நகர்த்தப்படுகிறது.
இதனை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோரில் நான்கு குடும்பங்களாக பிரிந்த சகோதரர்கள் முல்லையின் வளைகாப்பில் தான் ஒன்று சேர்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.
ஒன்று சேர்ந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்
இந்த நிகழ்விற்கு தடையாக மீனாவின் அப்பா நின்றுக் கொண்டிருக்கிறார்.
இப்படியான ஒரு நிலையில் வளைகாப்பில் கலந்து கொண்ட நான்கு சகோதரர்களும் ஒன்றாக இணைந்து நடனம் ஆடுவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.
முல்லைக்காக ஜீவா பெரிய நெக்கலஸ் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். கடைசியாக நான்கு பேரும் ஒன்றாக சேருகிறார்.
அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதனை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.