இட்லி மாவு புளிக்காமல் இருக்கணுமா? அப்போ இதை ஒரு கரண்டி போடுங்க
பொதுவாக வீடுகளில் வேலைக்கு செல்லும் பெண்கள் முதல் இல்லத்தரசிகள் வரை அனைவரும் காலையுணவாக இட்லி, தோசை தான் செய்வார்கள்.
சிலர் தோசை, இட்லி பிரியர்களாக இருப்பார்கள். எப்போதும் இட்லி தோசையை தான் சாப்பிடுவார்கள். இப்படி பிரியர்களாக இருப்பவர்கள் தோசை மாவு அதிகமாக புளித்திருந்தால் சாப்பிட மாட்டார்கள்.
வேலைக்கு செல்லும் பெண்கள் அந்த வாரத்திற்கு தேவையான இட்லி மாவை வாரத்தின் இறுதி நாளில் அரைத்து வைத்துக் கொள்வார்கள். இப்படி ஒரு வாரத்திற்கு அரைத்து சேமித்து வைக்கும் பொழுது மா வெள்ளிக்கிழமைகளில் அதிகமாக புளித்து போய் இருக்கும்.
ஃபிரிட்ஜ் பழுது, காலநிலை மாற்றம், மறதி உள்ளிட்ட காரணங்களால் இந்த செயற்பாடு நடக்கிறது. இப்படி அதிகமாக புளித்துவிட்டால் என்ன செய்வது என புலம்பாமல் சரிச் செய்யும் வழிமுறைகளை கண்டறிய வேண்டும்.
அப்படியாயின், புளித்து போன இட்லி மாவை எப்படி சரிச் செய்யலாம் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
1. இஞ்சி, பச்சை மிளகாய் பேஸ்ட்
புளித்து போன இட்லி மாவை சரிச் செய்வது எப்படி என குழப்பத்தில் உள்ளவர்கள் கொஞ்சமாக இஞ்சி, மிளகாய் இரண்டையும் பேஸ்ட் போன்று அரைத்து இட்லி மாவுடன் கலந்து விட வேண்டும். இப்படி செய்தால் புளிப்பு தன்மை நீங்கி இட்லி மா பார்ப்பதற்கும், சுவைப்பதற்கும் நன்றாக இருக்கும்.
2. சர்க்கரை அல்லது வெல்லம்
இட்லி மாவில் புளிப்பு தன்மை அதிகமாகி விட்டால், அதனை ஒரு துண்டு லெல்லம் அல்லது ஒரு கரண்டி சர்க்கரை போட்டு சரிச் செய்ய முடியும். மாவின் அளவுக்கு ஏற்ப சர்க்கரை கலந்து கொள்ளலாம். இது புளிப்பு சுவை மற்றும் மணத்தை குறைத்து சுவையான தோசையை கொடுக்கிறது.
3. அரிசி மாவு
புளித்த மாவில் கொஞ்சமாக அரிசி மா கலந்து விட்டால் புளிப்பு சுவை இல்லாமல் போகும். அதே சமயம், சாப்பிட விடாமல் தடுக்கும் மணத்தையும் இது கட்டுபாட்டிற்குள் கொண்டு வரும்.
4. ரவை
இட்லி மா அதிகமாக புளித்து விட்டால் ரவை கொஞ்சமாக சேர்க்கலாம். ரவை சேர்க்கும் பொழுது மாவில் புளிப்பு சுவை இருக்காது. அதே சமயம், சாப்பிடவும் சுவையாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |