Astrology: தீபாவளிக்கு பிறகு கோடிகளை கொண்டு வரும் யோகம்.. அதிர்ஷ்டம் யாருக்கு?
ஜோதிட சாஸ்த்திரன்படி, இந்த வருடம் தீபாவளி முடிந்த பின்னர் பெயர்ச்சிகளால் ராஜயோகங்கள் கிடைக்கவுள்ளது. அந்த வகையில் புதன், சுக்கிரன் இருவருமை் விருச்சக ராசியில் இணையவுள்ளன.
இதன் விளைவாக “லட்சுமி நாராயண யோகம்” உருவாக உள்ளது. இந்த யோகத்தினால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கவுள்ளது. நீண்ட நாட்களாக தொழில் முன்னேற்றம் காணாதவர்களுக்கு கூட இந்த பெயர்ச்சினால் வருமான வளர்ச்சியை காண்பார்கள்.
நவகிரகங்களில் புதன், சுக்கிரன் இருவரும் மங்களத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறார்கள்.
புதன் பகவான் பேச்சு, புத்திசாலித்தனம், வணிகம், படிப்பு ஆகியவற்றின் அதிபதியாகவும், சுக்கிர பகவான் செல்வம், ஆடம்பரம், அழகு, பொன், பொருள், வசதிகள் ஆகியவற்றின் அதிபதியாகவும் பார்க்கப்படுகிறார்கள். இந்த இரண்டு சுப கிரகங்களின் இணைவு ஜோதிட ரீதியாக அதிர்ஷ்டத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
அப்படியாயின், சுக்கிரன் - புதன் பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தில் நனையப்போகும் ராசியினர் யார் யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.
சிம்மம் | சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு நான்காவது வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகிறது. இதனால் அவர்களுக்கு பொன், பொருள், வசதிகள், ஆடம்பரம் ஆகியன கிடைக்கும். புதிய சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் வாங்குவதற்கான வாய்ப்பும் கிடைக்கும். தொழிலதிபர்கள் எதிர்பார்த்து காத்திருந்த ஆர்டர்கள் வீடு தேடி வரும். கூட்டாக தொழில் செய்து வருபவர்களுக்கு அதிகப்படியான லாபம் கிடைக்கும். ரியல் எஸ்டேட் மற்றும் சொத்து தொடர்பான வேலைகளை செய்பவர்களுக்கு வருமானம் இரட்டிபாக வாய்ப்பு உள்ளது. அத்துடன் குடும்ப உறவுகளுடன் கடந்த காலங்களில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். |
மேஷம் | மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு லட்சுமி நாராயண ராஜயோகமானது அதிர்ஷ்ட வீட்டில் உருவாகும். இதனால் பெயர்ச்சியின் முழு பலனையும் இவர்கள் பெற்றுக் கொள்வார்கள். அரசு வேலைகள் வேண்டும் என பிடிவாதமாக இருப்பவர்கள் இந்த பெயர்ச்சியால் நற்செய்தி வரலாம். பொற்காலத்தில் வீட்டில் அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது. நீண்டகாலமாக போகலாம் என நினைத்து வைத்திருந்த பயணங்கள் ஆதாயங்களுடன் செல்லும் அதிர்ஷ்டம் கிடைக்கும். |
விருச்சிகம் | விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் லட்சுமி நாராயண ராஜயோகத்தினால் ஆளுமையை மேம்படுத்தும் வாய்ப்புகளை பெற்றுக் கொள்வார்கள். எந்தவித குழப்பமும் இல்லாமல் அவர்கள் நினைக்கும் விடயங்களை செய்வார்கள் குடும்ப வாழ்க்கை வழமை போன்று அல்லாமல் இந்த காலப்பகுதியில் சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையவும் வாய்ப்பு உள்ளது. |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).