தெய்வத்திருமகள் குழந்தை சாராவா இது? வாயடைத்துப்போன ரசிகளர்கள்!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ரசிர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த தெய்வத்திருமகள்’ சாரா அர்ஜூனின் தற்போதைய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சாரா அர்ஜூன்
2011 ஆம் ஆண்டு சீயான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த “தெய்வத்திருமகள்” திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் தான் சாரா அர்ஜுன்.

விக்ரமின் மகளாக நிலா என்ற கதாபாத்திரத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிபடுத்தி, முதல் படத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து பேபி சாரா என அழைக்கப்பட்டு, தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்த நிலையில், சைவம், விழித்திரு ஆகிய படங்களில் நடித்தார்.

பின்னர் குறிப்பிட்ட இடைவெளிக்குப் பின் ’பொன்னியின் செல்வன்’ படத்தில் நந்தினி சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்தார்.
அந்த படத்தில் சாரா நடிப்பு கவனம் பெற்ற நிலையில், அதனை தொடர்ந்து தற்போது ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான “துரந்தர்” என்ற பாலிவுட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

தன்னை விட 20 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாக நடித்துள்ளது இணையத்தில் சர்சையையும் கிளப்பியுள்ளது.
இந்நிலையில், செம ட்ரெண்டிங்கான உடையில், ஹொட் போஸ் கொடுத்து சாரா அர்ஜூன் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |