டைட்டிலை பெறுவதற்கு 30 லட்சம் செலவு செய்தாரா திவ்யா கணேஷ்? வெளியான உண்மை
பிக் பாஸ் டைட்டில் வின்னரான திவ்யா கணேஷ் PR டீமிற்கு 30 லட்சம் செலவு செய்ததாக வெளியான வதந்திக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனில் நடிகை திவ்யா கணேஷ் டைட்டில் வின்னர் ஆனார். இவருக்கு 50 லட்சம் பணம் மற்றும் ஒரு பரிசாக கிடைத்தது.
சபரி இரண்டாவது இடத்திற்கு வந்துள்ள நிலையில், கானா வினோத் டைட்டில் வின்னராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு சென்றார்.
ஆரம்பத்தில் திவ்யா கணேஷின் செயலுக்கு பல எதிர்ப்புகள் கிளம்பியிருந்தாலும், நாட்கள் செல்ல செல்ல இவரை மக்களுக்கு அதிகமாகவே பிடித்திருந்தது.

PR-க்கு 30 லெட்சம் கொடுத்தாரா?
பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது வெளியே தனக்காக ப்ரொமோஷன் செய்வதற்கு PR - டீமிற்கு பல லட்சங்கள் பலரும் கொடுத்துள்ளதாக தெரிவித்திருந்தனர்.
ஆனால் இதில் திவ்யா கணேஷிற்கு இருந்த மக்களின் ஆதரவு PR-மூலமாகவே கிடைத்தது என்றும் இதற்கு 30 முதல் 40 லட்சங்கள் வரை அவர் செலவு செய்துள்ளார் என்று பேசப்பட்டது.

இதற்கு சமீபத்தில் திவ்யா கணேஷ் தனது பேட்டியின் மூலம் சரியான பதில் கொடுத்துள்ளார். தனக்கு PRவைத்திருந்தாலும், ஒவ்வொரு மக்களிடம் சென்று மொபைல் பறித்து ஓட்டு போட்டுவிட்டார்களா? தான் 30 முதல் 40 லட்சம் PR-க்கு செலவு செய்ததாக கூறுகின்றனர்.

தான் வாழ்க்கையில் சம்பாதித்த மிகப்பெரிய தொகையே இதுதான். இன்னும் வாடகை வீட்டில் தான் இருக்கிறேன். கார் லோனும் கட்டிக் கொண்டிருக்கின்றேன்.
அதுமட்டுமின்றி பிக் பாஸ் வீட்டிற்கு வரும் முன்பு தனக்கு வேலைகூட இல்லாமல் வீட்டில் சும்மா தான் இருந்தேன் என்று திவ்யா கணேஷ் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |