18 ஆண்டுகளின் பின் இணையும் செவ்வாய் சுக்கிரன்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்!
ஜோதிடத்தின்படி, கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்குப் பிறகு செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஆகிய இரண்டு சுப கிரகங்களின் அரிய சேர்க்கை சேர்க்கை கும்ப ராசியில் நடைபெற உள்ளது.
வேத ஜோதிடத்தில் செவ்வாய் கிரகமானது ஆற்றல், தைரியம், வலிமை, வீரம், கோபம் மற்றும் சொத்து ஆகியவற்றைக் குறிக்கிறது. அதே சமயம், சுக்கிரன் அழகு, இன்பம், ஆடம்பரம், செல்வம், மற்றும் செழிப்பு ஆகியவற்றின் அதிபதியாக கருதப்படுகின்றது.

அந்தவகையில், பெப்ரவரி மாதத்தில் 18 ஆண்டுகளின் பின்னர் கும்ப ராசியில் நிகழவுள்ள சுக்கிரன், செவ்வாய் சேர்க்கையால் 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க சாதக பாதக மாற்றங்கள் ஏற்படவுள்ளது.
இருப்பினும் இந்த அரிய சேர்க்கையால் கோடீஸ்வர யோகத்தை அனுபவிக்கப்போகும் ராசிகள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மகரம்

மகர ராசியின் 2வது வீட்டில் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை இடம்பெறவுள்ளமையால் இவர்களின் பொருளாதார நிலையில்,எதிர்பாராத உயர்வு கிட்டும்.
தொழில் ரீதியில் அபார வளர்ச்சி ஏற்படும். இவர்களுக்கு பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டும் பதவி உயர்வும் கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.
நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்த கடன் பிரச்சினைக்கு முடிவு கட்டுவீர்கள். பல வழிகளிலும் வருமானம் கிடைப்பதற்காக வாய்ப்புகள் உருவாகும்.
மிதுனம்

மிதுன ராசியின் 9வது வீட்டில் இந்த அரிய செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை நடைபெறுவதால், பெப்ரவரி மாதத்தில் இந்த ராசியினருக்கு பணவரவு கிடைப்பதற்கான வாயப்புகள் அதிகமாக காணப்படுகின்றது.
இந்த ராசியினர் தொட்டதெல்லாம் பொன்னாகும் அதிர்ஷ்டம் நிறைந்த காலகட்டமாக இது அமையும். பணியில் மதிப்பும் மரியாதையும் உயர்வடையும்.
காதல் மற்றும் குடும்ப வாழ்க்கையில் நீண்ட காலமாக இருந்துவந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைப்பதுடன், குடும்ப உறவுகளுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். குறிப்பாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்

விருச்சிக ராசியின் 4வது வீட்டில் இந்த செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை நடைபெறுவதால், இந்த ராசியினர் வாழ்வில் செல்வ செழிப்பு போதும் என்கின்ற அளவுக்கு கிடைக்கப்போகின்றது.
நினைத்த காரியங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிக்கும் அளவுக்கு மனவலிமை மற்றும் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடந்த கால மன அழுத்தங்களில் இருந்து விடுபட்டடு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கும் சூழ்நிலை தானாகவே அமையும்
எதிர்பார்த்த வகையில், பணபரிசு அல்லது பிடித்த பெருள் பரிசுகள் கிடைக்கும் வாய்ப்புகள் காணப்படுகின்றது. இவர்களின் நிதி நிலையில், இதுவரையில் இல்லாத அளவுக்கு பெரிய மாற்றம் ஏற்படும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |