நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டுமா?
ஒரு நாளை ஆரம்பிக்கும்போதே அந்த நாள் எவ்வாறு அமையும் என்பது தெரிந்துவிடும் என்று கூறுவார்கள்.
அது எந்தளவுக்கு உண்மையானது எனத் தெரியவில்லை. ஆனால், புத்துணர்ச்சியுடன் ஒரு வேலைகளை செய்ய ஆரம்பிக்கும் பொழுது அந்த நாளே சிறப்பானதாக அமைந்துவிடும். நாள் புத்துணர்ச்சியாக இருப்பதற்கு நேர்மறையான எண்ணங்கள் முக்கியமானது.
காலையில் எழும்பும்போது படுக்கை விரிப்புக்களை சரி செய்வதிலிருந்து நாள் ஆரம்பமாகிறது. படுக்கை விரிப்புக்களை ஒழுங்காகவும் சரியாகவும் பயன்படுத்தினாலே அந்த நாளின் எதிர்மறை எண்ணங்கள் ஓடிவிடும்.
காலையில் எழுந்தவுடன் தோட்டத்தில் நடப்பது, சிறிய உடற்பயிற்சிகளை செய்வது போன்றவற்றை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
உணவுகள்தான் அன்றைய நாளில் நாம் செய்யக்கூடிய அனைத்துக்கும் ஆதாரமானது. அதனால் கார்போஹைட்ரேட், கொழுப்பு, விட்டமின்கள் போன்ற ஊட்டசத்தான உணவுகளை உண்ண வேண்டும்.
மனதுக்கு இதமளிக்கக்கூடிய இசை, சொற்பொழிவுகளைக் கேட்கலாம். முடியுமானவரை நண்பர்கள், குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்கலாம். தியானம் செய்யும் பழக்கத்தை பின்பற்றலாம்.
நன்றாக தூங்க வேண்டும்.
இவ்வாறான விடயங்களை கடைபிடிப்பதன் மூலம் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்கலாம்.