காலையில் டீ, காபிக்கு பதிலாக இந்த ஜூஸை குடியுங்கள்: நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்!
பொதுவாகவே காலையில் ஒரு சிலர் எழும்புவதற்கே சோம்பலாக இருப்பார்கள். பிறகு டீயோ, காப்பியோ குடிப்பார்கள். ஆனால் காலையில் காப்பி, டீக்கு பதிலாக சுரைக்காய் ஜூஸை குடித்துப்பாருங்கள். முழு நாளும் உற்சாகமாக இருக்கலாம்.
சுரைக்காயில் சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், இரும்புச் சத்து, விட்டமின் பி போன்றவை உள்ளன. ஜீரண சக்தியை அதிகரிக்க சுரைக்காய் ஜூஸை குடித்தால் ஜீரணிக்கும் சக்தியை கொடுக்கும்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடலில் உள்ள அதிகப்படியான அமிலம் மட்டுப்படுத்தப்படும்.
அந்த வகையில் உடலுக்கு நன்மையை அள்ளி தரும் சுரைக்காய் ஜூஸ் எவ்வாறு செய்தென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- நறுக்கப்பட்ட சுரைக்காய் -1 கிண்ணம்
- வெள்ளரிக்காய் - 1 கிண்ணம்
- செலரி - 1 கிண்ணம்
- புதினா இலைகள் - சிறிதளவு
- எலுமிச்சை சாறு - அரை பழம்
- சீரக தூள் - 1 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
செய்முறை
ஒரு மிக்ஸி சாரில் அனைத்து பொருட்களையும் சேர்க்கவும். அவற்றை நன்கு அரைத்து விட்டு ஒரு வடிக்கட்டியில் வடிகட்டவும். பின்னர் அவற்றை ஒரு டம்ளருக்கு மாற்றி பருகலாம்.